ப
பார்த்தார்; “பிறந்தவாறும்”
என்ற திருவாய்மொழியிலே, தரித்து நின்று குணாநுசந்தானம் பண்ணவல்லேனாம்படி செய்தருளவேண்டும்
என்று சரணம் புக்கார்; “வைகல் பூங்கழிவாய்” என்ற திருவாய்மொழியிலே, அப் பெரிய துயரத்தோடே
கூடத் தூதுவிட்டார்; விட்ட ஆள் சென்று அத்தலைப்பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய்,
யானைக்கு அருள்செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வராநிற்க, அவ்வளவு பற்றாமே கிடந்து
துடித்து அலமந்து, ‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து, ‘முடிந்து போவதற்கு
மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள். 1அது
இவள் நினைத்த போதாக முடியும்படி இராதே யன்றோ. அங்ஙன் செய்யலாமன்று, இவள் “ஏறாளுமிறையோனும்”
என்ற திருவாய்மொழியில் ‘வேண்டா’ என்றபோதே போமேயன்றோ. 2இனி,
போகத்துக்கு அவன் வரவு வேண்டினதைப்போன்று, முடிவுக்கும் அவன் வரவுவேண்டியிருந்தது. 3பிரிவில்
குணாநுசந்தானம் பண்ணித் தரிக்கலாம்; அவன் சந்நிதியில் அவனை ஒழிய அரைக்கணம் முகம்
மாறியிருக்குமதற்கு மேற்பட முடிவு உண்டோ. 4அன்றிக்கே, அவன் பெயரநின்று இத்தலையைப்
பண்ணின மிறுக்கு அடங்கலும், அவன் சந்நிதியிலே தான் முடிந்து அவனையே நோவுபடுத்தப்
பார்க்கிறாள் என்னுதல்.
5அவன்,
வரவிலே சிறிது தாழ்க்க, பிரணயரோஷம் தலையெடுத்து, ‘இனி இருந்து ஜீவிக்கும் ஜீவனம்வேண்டா’
என்று
1. முடியப் பார்க்கிறது ஏன்?
முடிந்துவிடல் ஆகாதோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அது இவள்’ என்று தொடங்கி.
2. ஆனபின்பு, அவன்
வந்த பின்பே முடியவேண்டும் என்கிறார் ‘இனி,
போகத்துக்கு’ என்று தொடங்கி.
3. பிரிவு அன்றோ
முடிகைக்கு உறுப்பு ஆம், அவன் வரவு முடிகைக்கு உறுப்பு
ஆமோ? என்ன, ‘பிரிவில்’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
4. இதுகாறும், தான்
முடியப் பார்க்கிறாள் என்றார். இனி, அவன் தன்னையே
முடிக்கப் பார்க்கிறாள் என்று வேறும் ஒரு
கருத்து அருளிச் செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
5. ஆயின், அவனிடத்தில்
துவேஷத்தாலே செய்கிறாளோ? என்ன, ‘அவன்
வரவிலே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
|