பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
63

New Page 1

முடியப் பார்க்கிறாள் பிரிவு பொறுக்க மாட்டாமையாலே. 1“மிக்க அன்பினாலுண்டாகிய கலவியாலும் என்னுடையவன் என்ற அபிமானத்தாலும்” என்கிறபடியே, அவரோடு உண்டான பலநாள் பழக்கத்தாலும், கலவியாலும், “என்னுடையவரன்றோ” என்கிற வேண்டப்பாட்டாலும், பெருமாளை மேலிட்டு வார்த்தை சொன்னாள் அன்றோ பிராட்டி. என் சொன்னாள்? என்னில், 2‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”

    3
“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய - பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்று

 

1. இப்படிப் பிரணயரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

 
“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரிசிக்ஷேப ராகவம்”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2. எடுத்த சுலோகத்திற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு
  - பெருமை. பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால்
  கோபமாமேயன்றோ. மேலும், ஒரேபொருள் என்னலாம்படி கலந்தவன்
  விட்டுப் போகப் புக்கால் கோபமாமேயன்றோ. ஆதலால், பலகாலம்
  பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம்
  என்க. தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம்
  ஆதலாலும், ‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’ மேலிட்டு
  வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க. மேலிட்டு வார்த்தை
  சொல்லுகையாவது, வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை
  சொல்லுதல்.

2. ‘வாரீர்’ என்றது முதல் ‘போரவெறுப்பர்’ என்றது முடிய, “கிம்த்வா” என்ற
  சுலோகத்துக்கு அவதாரிகை. ‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
  சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

  “கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
   ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3. ஊடலால் வெறுத்து வார்த்தை சொல்லுவதற்கு, வேறும் ஒரு பிரமாணமும்
  அதற்குப் பொருளும் அருளிச்செய்கிறார் “ஈர்ஷ்யாரோஷௌ” என்று
  தொடங்கி.