பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
65

எனக

எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

    2
இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ. 3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி - ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,

 

1. இதுகாறும் சொல்லிய பொருளை இவ்விடத்திலே ஏறிடுகிறார் ‘இப்படியே’
  என்று தொடங்கி.

2. ஊடல் காரணமாக வெறுத்து வார்த்தை சொன்னதற்கு, வேறும் ஒரு
  பிரமாணம் காட்டுகிறார் ‘இவ்வளவேயோ’ என்று. இவர் தாம் இலக்காக
  - ஸ்ரீ ராமபிரான் முன்னிலையாக. ‘இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்’
  என்னுமதனை, பின்னே வருகின்ற ‘என்னுமவளன்றோ’ என்னுமதனோடு
  கூட்டிப் பொருள் காண்க. வரவிட்ட ஆள் - திருவடி.

  “குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
   மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3. எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘காகுத்ஸ்த:’ என்று
  தொடங்கி. “காகுத்ஸ்த:” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘பரிபவம்’ என்று தொடங்கி. எரிக்காததற்குக் காரணம்,
  நம்பக்கல் உபேக்ஷை ஒழிய, தம்முடைய அம்பு இரண்டனையும்
  எரிக்கமாட்டாமை இல்லை என்கிறார் ‘நீர்ப்பண்டத்திற்கு’ என்று தொடங்கி.
  இரண்டற்கும் வெவ்வேறு அம்புகள் வேண்டாவோ? என்ன, ‘கடலில் நீரே’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது, தாம்
  எரிக்காதிருந்தது, என்பக்கல் அன்பு இல்லாமை அன்றோ என்றபடி.

4. “மேகலாம்” என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘ஒக்கக்
  கைப்பிடித்தவளாகிலும்’ என்று தொடங்கி. பிரமனாலே படைக்கப்பட்டதனை
  இவராலே அழிக்கப்போமோ? என்ன, ‘ஈசுவரர்கள்’