|
1
1“பித்ரு
வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ?
என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும் இப்புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.
2இவளும்
“மாசறுசோதி” என்னும் திருவாய்மொழி தொடங்கிப் போர நோவுபட்டு, அதுதன்னை “வைகல் பூங்கழிவாய்”
என்னும் திருவாய்மொழியளவும் வரப் பாடு ஆற்றி, அவ்வளவிலும் வரக் காணாமையாலே தூது விட்டு, தூதுவர்களுடைய
வார்த்தை அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்னே பற்றாதபடி பதறி, ‘இனி, அவன் தான் வந்தாலும்
கலவியாய் அது பிரிவினை முடிவாகவுடைத்தாயல்லது இராது; ஆனபின்பு, அவன் வந்து கலந்து பிரிந்த
கோள்வாய் பொறுக்க அரிதாயிருக்கும்; பின்பு, பிரிவாகிற புதுக்கோமுற்றவன் வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று ஆற்றாமைதோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
3‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா -
என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். இது,
சுலோகத்திலேயுள்ள “கோபேந” என்றதற்கு, பாவம்.
1. ஊடல் காரணமாக
வெறுத்து வார்த்தை சொன்னதற்கு வேறும் ஒரு
பிரமாணம் காட்டுகிறார் ‘பித்ருவசன’ என்று தொடங்கி.
“தர்மாபதேஸாத்
த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி
அரண்யம் நயத: பதாதிம்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 36
: 29.
2. நன்று, பிராட்டி
பலநாள் பிரிந்து நோவுபட்ட காரணத்தால் ஊடினாள்;
இவள் அப்படிப் பலநாள் பிரிந்து நோவுபட்டாளோ?
என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இவளும்’ என்று தொடங்கி. கோள்வாய் -
புதுப்புண்.
புதுக்கோமுற்றவன் - புத்ததிகாரி. ‘எங்ஙனே இருந்தாளோ?
என்னில்,’ என்றது, இவள் ஆற்றாமை தோற்ற
இருந்த தன்மை யாருடைய
தன்மையைப்போலே இருந்தது என்றால் என்றபடி.
3. “ஹிமஹத நளிநீவ
நஷ்டஸோபா
வ்யஸநபரம்பரயா
அதிபீட்யமாநா
ஸஹசர ரஹிதேவ
சக்ரவாகீ
ஜநகஸு தா
கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”
என்பது, ஸ்ரீராமா. சுந். 16
: 30.
|