பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
67

1பன

1பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ; அதனாலே அழகு அழிந்திருந்தாள். வ்யஸந பரம்பரயா - 2பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை. அதிபீட்யமாநா-இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை. ஸஹசரரஹிதேவ சக்ரவாகீ-3வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ; ஜனகஸு தா - ‘இவைவரும்’ என்று வளரப் பெற்றது இல்லை. க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா - 4மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை. இவளும் அப்படியே ‘முகம்பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்; இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.

    இவள்தான் இப்படிப் பாரிக்கைக்கு அவன்தான் வாரா நின்றானோ? என்னில், 5அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள்

 

1. பனியினாலே வாட்டப் படுவதற்கு முன்பு தாமரை ஓடை பொலிவோடு
  தோன்றியது போன்று, பிராட்டியும் திருவயோத்யையில் இருந்த பன்னிரண்டு
  வருடங்களும் ஒரு தடையும் இன்றிக் கலந்திருந்தாள் என்று,
  “நஷ்டஸோபா” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பன்னிரண்டு’
  என்றுதொடங்கி. தண்ணீர்த்துரும்பு - தடை.

2. “பரம்பரயா” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பிரிவினைப்போன்று’
  என்று தொடங்கி.

3. “சக்ரவாகீ” என்றதற்கு, பாவம், ‘வருமளவும்’ என்று தொடங்கும் வாக்கியம்.

4. ‘மேலே கூறியவை’ என்றது, தாமரையோடையினையும், சக்கரவாகப்
  பறவையினையும்.

5. அவன்தான் வாராநின்றானோ? என்கிற ஐயத்துக்கு, ஐந்து வகையாக விடை
  அருளிச்செய்கிறார் ‘அவன் வரவுக்கு’ என்று தொடங்கி.

  இங்கே,

  “பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநங் காதலர்
   வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி;
   . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
   இனைநல முடைய கானம் சென்றோர்
   புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயின்
   பல்லியும் பாங்கொத் திசைத்தன
   நல்லெழில் உண்கணும் ஆடுமா லிடனே”

(பாலைக்கலி. 10.)

  என்னும் கலித்தொகைப் பகுதியையும், கம்பராமாயணம் சுந்தரகாண்டம்
  காட்சிப் படலம், 32-முதல் 35-முடிய உள்ள செய்யுட்களையும் ஒப்பு
  நோக்கல் தகும்.