|
சரண
சரண்யனுடைய லக்ஷணம்
சொல்லுகிறது. 1இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதேயன்றே; ஆனபின்பு,
அவனோடு இவனோடு வாசி இல்லை. அன்றிக்கே, 2தன்நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம்முதல்
இல்லையாய் இருந்தது’ என்று தன்குறையை அறிவிக்கவும் மாட்டாதபடியாயிருந்தான்; ஆனபின்பு, இவனுக்கு
நாமேயன்றோ உளோம் என்று திருவுள்ளம் இவன்பக்கல் ஊன்றியிருக்கும். பரேஷாம் சரணாகத: அரி:-பகைவர்களில்
வைத்துக்கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று 3இவன். அது என்? என்னில்,
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில்
இல்லாமையாலே ‘பகைவன்’ என்னவுமாயிருக்கை. 4அன்றிக்கே, முன்பு செய்தனவற்றிற்கு
அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும், இரண்டும்
சொல்லலாயிருக்கை. அன்றிக்கே, 5‘கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே
என்னுதல்.
1. சரண்யனுடைய இலக்ஷணம் சொல்லுகிறது கொண்டு ஆர்த்தனையும்
திருப்தனையும் ஒக்கச் சொல்லலாமோ?
எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவனுடைய’ என்று தொடங்கி.
2. மேல் ஆர்த்தனோடு
ஒப்புமைசொல்லி, ஆர்த்தனைக்காட்டிலும்
திருப்தனுக்கு உயர்வு சொல்லுகிறார் ‘தன் நிலையறிந்து’
என்று தொடங்கி.
இவன் பக்கல் - திருப்தன் பக்கல்.
3. ‘இவன்’ என்றது,
திருப்தனை. ‘அது ஏன்? என்னில்’ என்றது, சரணாக
அடையும் தன்மையும் பகைத்தன்மையும் தம்முன் முரண்பட்டனவே
யன்றோ என்னில்? என்றபடி.
4. மேல் உலக மரியாதையிலே
அருளிச்செய்து, சாஸ்திர மரியாதையிலே
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
5. கொன்றேன் பல்லுயிரைக்
குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க்
கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர்
குளிர்மாமலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன்
அடியேனைஆட் கொண்டருளே.
என்பது, பெரிய திருமொழி,
1. 9 : 3. என்றது, “பரேஷாம் அரிஸ்ஸந்
ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க்கொண்டு
பிராயச்சித்தம்
முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து
அருளிச்செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன்
என்பது பொருள்.
ஆக,
‘பகைவர்களில் வைத்துக்கொண்டு சரணம் அடைந்தவனான
பகைவன்’ என்று மேலே கூறியதனை, மூன்று காரணங்களால்
விளக்கியபடி.
|