|
ப
பிராணாந் பரித்யஜ்ய
- பிராணன்களை ஒருதலையாகவிட்டு. 1‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்னவேண்டாவோ?
என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது ஒன்றும் போராமையாலே அதுவேண்டாவாயிற்று. ரக்ஷிதவ்ய:
க்ருதாத்மநா-திருந்திய மனத்தையுடையவனாயிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது, அறிவுடையார்க்கு
இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி. இதுவன்றோ அவன்படி. 2இப்படி, களித்துச்
‘சரணம்’ என்றாலும் பொறுக்கமாட்டாதவன், ‘மாசறுசோதி’ என்ற திருவாய்மொழி தொடங்கிப்
போர மிறுக்குப்பட்டு நான்கு முறைகள் அடுத்துச் சரணம் புக்கு, அவ்வளவிலும் முகம்காட்டாதொழியச்செய்தேயும்
தூதுவிட்டு, ‘இப்படி இம் மிறுக்குகள் எல்லாம் பட்டது நம்மை எண்ணி அன்றோ’ என்றிருப்பான்” என்று
இருக்கையாலும்;
3இவ்வளவும்
வர இவள் தான் முடியாதே கிடக்கையாலும், அவன் இயல்பினை நம்பியிருக்கையினாலும், அவன் வரவுக்கு
அறிகுறியான நன்னிமித்தங்கள் பல உண்டாகையினாலும்; 4இவையெல்லாம் கிடக்க,
‘நம்முடைய பாக்கியஹாநிதான் அவனை நம்முன்னே
1. இவனைக் காட்டிலும்
பிராணன்கள் சிறந்தனவன்றோ என்று சங்கித்து,
இவன் கூறிய சரணம் என்ற வார்த்தைக்குப் பிராணன்கள்
ஒப்பாகாமையாலே
சிறந்தனவல்ல என்று பரிஹரிக்கிறார் ‘பிராணா நபி’ என்று தொடங்கி.
‘அவன்
சொன்ன சொலவு’ என்றது, ‘சரணம்’ என்று சொன்ன சொல்லை.
2. மேல் சுலோகத்தாற்
சொன்ன குணாதிக்யத்தைக் கிம்புனர் நியாயத்தாலே
ஸ்ரீராமபிரான் பக்கலிலே ஏறிட்டுக் காட்டுகிறார்
‘இப்படி’ என்று தொடங்கி.
‘களித்து’ என்றது, திருப்தனாய் என்றபடி.
3. மூன்றாவது காரணத்தை
‘இவ்வளவும் வர’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். மேலே கூறிய நன்னிமித்தங்களையும், “ஆர்த்தோவா”
என்ற சுலோகத்தாற் கூறிய அவன் குணாதிக்யத்தையும் எதிர் நிரல்
நிறையாக அநுவதிக்கிறார்
‘அவன் இயல்பினை’ என்று தொடங்கி. ‘அவன்
இயல்பினை’ என்றது, அவன் கிருபையுள்ளவனாயிருக்கும்
தன்மையை.
4. நான்காவது காரணம்,
‘இவையெல்லாம் கிடக்க’ என்று தொடங்கும்
வாக்கியம்.
|