|
New Page 2
கொண்டுவந்து நிறுத்தும்’
என்று இருக்கையினாலும்; 1‘பிரிவு விரும்பப்படாத நிலையிலே முன்னே வந்து நிற்கவும்
வல்லன்’ என்று இருக்கையினாலும், ‘இன்னமும் ஒருகால் கலந்து பிரிந்து நம்மை முடிக்கவேண்டும்’ என்று
இருப்பவனாதலானும் ‘வரவுதப்பாது’ என்று அவன் வரவை நிச்சயித்தாள்.
அங்ஙனம் நிச்சயித்தவள்,
தானும் தோழிமாருமாக ‘இனி, அவன் 2வந்தாலும் அவனுக்கு முகங்கொடுத்தல், அவனோடு
வார்த்தை சொல்லுதல் செய்யக்கடவோமல்லோம்’ என்று அறுதியிட்டுக்கொண்டு, ‘அவன் அறியாதது
ஓர் இடத்தே போய் இருக்க வேண்டும்’ என்று பார்த்து, காயாம்பொழிலாய் அதிலே விளையாடு சூழலாய்
அதன்நடுவே அதிமநோகரமாய் இருப்பதொரு மண்டபமாய், அம் மண்டபத்திலே 3கழகமாக
இருந்து, வந்தாலும் அவனுக்கு இட்டீடுகொள்ளுகைக்குப் பற்றாசு இல்லாதபடி பூவை கிளி பந்து தொடக்கமான
சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே
சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி, 4‘இனி, இவர்கள் மறந்தவை
எவையேனும் உளவாகில் அவைபெற்று அவனுக்குச் சத்தை உண்டாகவேண்டும்படியாய், இப்படிச் சமயமிட்டு,
வந்தாலும் அவனுக்குப் புகுர ஒண்ணாதபடி ஆதரம் இன்மையாகிற கன்மதிளை உரக்கவிட்டு, அவனுடைய
5முற்றறிவினைக்கொண்டு காரியங்கொள்ளுகைக்கு ஒருவழி இல்லாதபடியாகவும் வரம்பில் ஆற்றலைக்
1. ஐந்தாவது காரணம்,
‘பிரிவு விரும்பப்படாத’ என்று தொடங்கும் வாக்கியம்.
முன்னேவந்து நிற்றல் எதற்கு? என்ன,
‘இன்னமும் ஒருகால்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. மேலே கூறிய காரணங்கள்
ஐந்தும் தன்தீவினை காரணமாகப் பயன்
அற்றவைகளாய், வாராதிருக்கையே நிச்சயம் என்னுமதனைக்
காட்டுகிறது
‘வந்தாலும்’ என்ற உம்மை.
3. கழகம் - கூட்டம்.
இட்டீடு கொள்ளுகை - வார்த்தையிட்டு வார்த்தை
கொள்ளுதல். ஊரழிபூசல் - ஊர் அழியும்படியான சண்டை.
4. ஆயின், “என்னுடைய
பந்தும் கழலும் தந்து போகு நம்பி” என்று அவன்
கையிலே இருப்பனவாகச் சொல்லாநின்றதே? என்ன,
‘இனி, இவர்கள்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
5. ‘முற்றறிவினைக்கொண்டு’
என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
அவனுக்கு முன்னே ஏலக் கோலிச் செய்கிறாளாகையாலே,
அவன் தன்
முற்றறிவினைக் கொண்டு காரியம் கொள்ள வழியில்லை;
அந்தப்புரமாகையாலே, வரம்பில்
ஆற்றலைக் கொண்டும் காரியமில்லை
என்றபடி.
|