பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஸர

மூன்றாந்திருவாய்மொழி - முன்னுரை

103

ஸர்வகாம ஸம்ருத்திநீ- 1‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே, எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன். 2அப்படியும் அன்றே இங்கு: 3‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது? 4‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு. 5அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது. 6‘திருத்தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேடம்: தலைமகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேடம்: அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின், அவற்றுள், விலகுகின்ற திருத்தாயார் முகத்தாற்சொல்லுகிறது, ‘சொரூபமான பிராவண்யம் உபாயத்திற்சேர்ந்தால் செய்வது என்?’ என்னுமதற்குச் சொல்லுகிறது; பெண்பிள்ளை கருத்தாற்சொல்லுகிறது. ‘உபாயம் அவனேயாகில் பிராவண்யம் சொரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது. ஆக, இவ்விரண்டு அர்த்தத்தையும் இரண்டு முகத்தாலே ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது. 7மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத்திருவாய்மொழிக்கு ஏற்றம்.

___________________________________________________________________

1. ‘ஸர்வாந் காமாந்’ என்றது, தைத்.

2. ‘ஸர்வாந் காமாந்’ என்றது, பரத்துவத்திலே அன்றோ? இங்கே உண்டோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அப்படியும்’ என்று தொடங்கி. ‘இங்கு’
  என்பது, ஸ்ரீராமாவதாரத்தில் என்றபடி.

3. ‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’

  என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

4. இத்திருவாய்மொழிக்குச் சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார், ‘ஆக, இதனால்’
  என்று தொடங்கி.

5. ‘இத்த இரண்டு வகைக்கட்கும் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அது கருமம் அடியாக’ என்று தொடங்கி.

6. திருத்தாயாரான நிலைக்கும், தலைமகளான நிலைக்கும் வேறுபாடு அருளிச்செய்யத்
  திருவுள்ளம் பற்றி அதனை அநுவதிக்கிறார், ‘திருத்தாயார்’ என்று தொடங்கி.

7. முதலிலே அருளிச்செய்த யோஜனையில், ‘மேல் திருவாய்மொழியை நோக்க இதற்கு
  வாசி யாது?’ என்ன, ‘மோகமும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.