ப
|
102 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பிரிவைப் பற்றிப் பேசினான்;
பேச, 1இவளும் பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே, ‘கலவியிலே ஒரு
வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்; இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட,
இவளும் திருஅணுக்கன் திருவாசல் அளவும் ஒருப்படுத்தி மீண்டாள்: 2எல்லா அளவிலும்
பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ? பின் இவள் நோவுபடப்புக. இதனைக் கண்ட தோழிமாரும்
தாய்மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க, ‘ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய்
அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும் கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும்
அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்; அதனைக் கேட்ட அவர்கள்,
‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன, அவர்கள், ‘அதற்கு நாங்கள்
வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், 3நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று
4பிள்ளான் பணிப்பர்.
5ஸமா
த்வாதச தத்ர அஹம்-இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம்
அவரோடே அனுபவிக்கப் பெற்றேன்காண்! ராகவஸ்ய நிவேசநே-எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர்
தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன். புஞ்ஜாநா மாநுஷாந் போகாந்
____________________________________________________________________
1. பிரிவைப் பற்றிப்
பேசும் போது, ‘பிரிதல் கூடாது என்ன ஒண்ணாதோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இவளும்’ என்று தொடங்கி.
2. ‘இப்படி வழி விட்டு
மீண்டாளாகில் துக்கப்படுவான் என்? என்ன, ‘எல்லாவளவிலும்’
என்று தொடங்கி விடை அருளிச்செய்கிறார்.
3. ‘தென்திருப்பேரையில்
சேர்வேன் சென்றே’ என்ற பாசுரப்பகுதியைத் திருவுள்ளம்
பற்றி, ‘நானேயாகிலுத் போகை தவிரேன்’
என்று அருளிச்செய்கிறார்.
4. ‘அணுகியடைந்தான்’ என்றதனால்,
கலவி நிகழ்ந்தது என்பது பிள்ளான் திருவுள்ளம்;
கலவி உண்டானால் தனியே ஒரு திருவாய்மொழி
அருளிச்செய்வார்; அது
செய்யாமையாலே பிள்ளான் நிர்வாஹம் அத்துணைச் சிறப்புடைத்து அன்று என்பர்.
5. முன்பு எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘ஸமாத்வாதச’ என்று
தொடங்கி. தண்ணீர்த்துரும்பு-தடை.
|