த
|
மூன்றாந்திருவாய்மொழி - பா. 1 |
109 |
தியானிக்கத் தக்கதாகச்
சொல்லுகிறது; பின்பு 1‘இந்த ஆலிங்கமானது எல்லாப் பொருளுக்கும் சமானமாகக் கடவது,’
என்று கொடுப்பது அவ்வடிவேயாயிற்று. 2புறம்புள்ளார் சொன்னபடி சொல்லுகிறார்கள்;
நம் ஆழ்வார்கள் போனவழி இதற்கு மேற்பட இல்லை: 3‘இதற்கும் உள்ளே ஒன்று உண்டு’
என்று சொல்லுகிறவர்கள், சொரூபத்தின் உண்மை சொல்லுகிறார்களித்தனை; விக்கிரஹம் இல்லை
என்று அன்று. புள்ளைக் கடாநின்ற-4‘அகவாயில் நின்று சுழிக்கு மத்தனையோ?’ என்று
அவன் விரைந்து வடிம்பு இட்டுத் தாக்க ‘ஓம்காண்! நீ அறிந்தாயோ?’ என்று தூண்டி மீளாநிற்கும்;
5‘அறிவுள்ளவனுடைய’ என்கிறபடியே, பக்ஷபாதத்தோடே சேர்க்கையிலே அன்றோ அவனுக்கும்
பணி? கடாகின்ற - 6நடந்துபோனதாய் மறக்கிறீர்கள் அன்று; இனி வருவதனை உபதேசிக்கிறது
அன்று; இப்பொழுது நடப்பதற்கு உபதேசம்
____________________________________________________________________
1. ‘ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து
பரிஷ்வங்கோ ஹநூமத:’
என்பது, ஸ்ரீராமா.யுத். 1:13.
ஆக, இதனால், ‘உபாசனவேளையில்
விக்கிரஹத்தைத் தியாளிக்கப்பட வேண்டியதாகச் சொல்லுகையாலும், பல வேளையிலும் கொடுப்பதும்
எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருப்பதற்கு விஷயமும் விக்கிரஹமேயாகையாலும் விக்கிரஹம் கல்பிக்கப்பட்டது
அன்று’ என்றபடி.
2. ‘ஆனால் ஒரு சிலர் இதற்கு
இசையவில்லையே?’ என்ன, ‘நமக்கு அவர்களைக்
கொண்டு காரியம் என்? நம் ஆழ்வார்கள் அருளிச்செய்ததுவே
நாம் நம்பத்
தகுந்தது’ என்கிறார், ‘புறம்புள்ளார்’ என்று தொடங்கி.
3. ‘‘தத்ஏகாவயஸம் தேவம்’
என்பது போன்றவைகளால் விக்கிரஹத்தை விட்டு அப்பால்
போவான் என்று சொல்லப்படுகின்றதே?’
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இதற்கு’ என்று தொடங்கி. இதற்கும்-விக்கிரஹத்திற்கும்.
4. ‘திருவடியை,
‘கடாகின்ற’ என்று அஃறிணைப் பொருளாகச் சொல்லுவான் என்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அகவாயில்’ என்று தொடங்கி.
5. ‘அப்படி ஈஸ்வரனைக்காட்டிலும்
திருவடிக்குக் காப்பாற்றுவதில் பாரிப்பு உண்டோ?’
என்ன, ‘அறிவுள்ளவனுடைய’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘தீமத:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4. இங்கு, ‘தீமத:’ என்பது,
திருஷ்டாந்தத்திற்காக
வந்ததித்தனை.
6.
‘கடாகின்ற’ என்றதனை, ‘காணீர்’ என்றதனோடே கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
‘நடந்து போனதாய்’
என்று தொடங்கி.
|