New Page 1
|
110 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
வேணுமோ? காணீர் -
1காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே
அன்றோ? உங்களுக்குக் குரகோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.
காணீர்-உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது? என்னைப் போலே உட்கண்ணாலே
காணீர்கோள்! ‘நாங்கள் கண்டிலோம்; கண்ட நீ சொல்லிக்காணாய்!’ என்றார்கள்; என்ன,
சொல்லுகிறாள் மேல்:
என் சொல்லிச்
சொல்லுகேன் - எனக்குச் சொல்லலாவது இல்லை! என்ன பாசுரமிட்டு எதனைச் சொல்லுவது? 2உங்கள்
கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை. 3இவர்க்கு
நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லைகாணும்! என் சொல்லிச் சொல்லுகேன் - 4நான்
வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்லமாட்டேன். விஷயம் இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே
சொல்லி முடிக்கப் போகாது; எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பரிகரம் இல்லாமையாலே சொல்லத்தான்
வேண்டா. அன்னைமீர்காள்- 5அறிந்த விஷயங்கொண்டு ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக்கொள்ளல்
செய்யலாம் அன்றோ எனக்கு ஒத்தவர்கள் ஆனிர்கோளாகில்? என்
___________________________________________________________________
1. ‘இப்படியானால் உபதேசிப்பது
என்?’ என்ன, ‘காணீர்’ என்ற பதத்திற்குப் பொருளை
அருளிச்செய்யுமுகத்தால் அதற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘காண்கின்றீலீர்’
என்று தொடங்கி. ‘காணீர்’ என்பதற்குக் ‘காண்கின்றீலீர்’
என்பதும், ‘காணுங்கோள்’
என்பதும் பொருள். அவற்றுள், ‘காணுங்கோள்’ என்ற இரண்டாவது
பொருளை,
காதுகளாலும் புறக்கண்களாலும் உட்கண்ணாலும் காணவேண்டும் என்று
மூவகைப்படுத்தி அம்மூவகைப்
பொருள்களையும் முறையே அருளிச்செய்கிறார்,
‘உங்களுக்கு’ என்று தொடங்கி. குர கோஷம்-குளம்பின்
ஒலி.
2. ‘பாசுரமிட்டுச் சொல்ல
ஒண்ணாதோ?’ என்ன, ‘உங்கள்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
3. ‘என்நெஞ்சினூடே’ என்பதையும்,
‘என் சொல்லிச் சொல்லுகேன்?’ என்பதனையும்
கூட்டி ரசோக்தியாக அருளிச்செய்கிறார்,
‘இவர்க்கு’ என்று தொடங்கி.
4. சொல்லப் போகாமைக்கு
மூன்று காரணங்கள் அருளிச்செய்கிறார், ‘நான் வலிமை’
என்று தொடங்கி.
5.
‘எல்லாம் சொல்லப்போகாவிட்டாலும், அறிந்த அளவு சொல்ல ஒண்ணாதோ?’ என்ன,
‘அறிந்த’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘எனக்கு ஒத்தவர்கள்’
என்றது, தோழிமார்களை.
|