பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

மூன்றாந்திருவாய்மொழி - பா. 2

115

என்ற திவ்வியதேசத்தில் எழுந்திருளியிருக்கின்ற வானப்பிரானும் மணிவண்ணனும் கண்ணனுமான எம்பெருமானது சிவந்த கொவ்வைக்கனி போன்ற திருவதரத்தினிடத்தது’ என்கிறாள்.

    வி-கு:
நானம் - கத்தூரியுமாம். சேரி - தெரு; அல்லது, ஊர். வானப்பிரான் -நித்தியசூரிகளுக்குத் தலைவன்; வானம் - இடவாகு பெயர். வாயின் திறத்து-வாயினிடத்தது.

    ஈடு:
இரண்டாம் பாட்டு. 1தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாளாய் அன்றோ மேற்பாசுரத்தில் நின்றது? ‘இவள் இவ்வளவிலே மீளுமவள் அன்றிக்கே இருந்தாள்’ என்று தாய்மாரோடு தோழிமாரோடு அயற்சேரியுள்ளாரோடு வாசி அற வந்து திரண்டு ஹிதம் சொல்லப் புக்கார்கள். ‘உங்களுடைய நல்வார்த்தையைக் கேளாதபடி நிரவதிகமான பரத்துவ ஸௌலப்பியங்களையுடையவன் பக்கலிலே சென்ற சேர்ந்த என் நெஞ்சினைத் தகைய மாட்டுகின்றிலேன்; என் நெஞ்சினைக் கடல் கொண்டது காணுங்கோள்!’ என்கிறாள்.

    நானம் கருங்குழல் தோழிமீர்காள் - 2அவர்களுக்கு ஒரு பழி சொல்லுமாறு போலே சொல்லுகிறாள், அவர்கள் தலையான நறுநாற்றத்தையுடையவர்கள் வந்து நிற்கையாலே, நானம் - நறு நாற்றம். 3மயிர்பட மாந்தும்படி அன்றோ இவள்படி? 4உங்கள் சந்நிதி இல்லையாகில் நான் இங்கே இரேனோ? மை வண்ண நறுங்

____________________________________________________________________

1. திருப்பாசுரமுழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார் செய்கிறார்.
  ‘வானப்பிரான் மணிவண்ணன்’ என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றிப் ‘பரத்துவ
  சௌலப்பியங்களையுடையவன்’ என்கிறார்.

2. நானக் கருங்குழல் தோழிமீர்காள்’ என்று விளிக்கின்றவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘அவர்களுக்கு’ என்று தொடங்கி. ‘தலையான’ என்பதற்குத்
  ‘தலையிலே உண்டான’ என்பதும், ‘சிறந்ததான’ என்பதும் பொருள்.

3. ‘கருங்குழல்’ என்றதனைக் கடாட்சித்து ரசோத்தியாக, பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘மயிர்பட’ என்று தொடங்கி. மயிர்பட மாந்துகையாவது, இவர்களுடைய கருங்குழல்,
  அவனுடைய கருங்குழலை நினைப்பூட்டுவதாயிருத்தலின், அதனால் உண்டாகும்
  துன்பத்தைத் தெரிவித்தபடி. கவரிமான் மயிர் நீப்பின் உடனே இறக்கும் என்பது
  தொனிப்பொருள்.

        ‘’மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்’

என்பது, திருக்குறள்.

4. ‘நானக் கருங்குழல்’ என்று விளிக்கின்றவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார். ‘உங்கள்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
  ‘மைவண்ணம்’ என்று தொடங்கி. இது, திருநெடுந்தாண்டகம். 21.