பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

116

திருவாய்மொழி - ஏழாம் பத்து

குஞ்சியினை நினைப்பு ஊட்டுகிறதாய் இராநின்றாதே இவர்கள் குழல். 1‘நம் இருவர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே’ என்று இவளுடைய இன்ப துன்பங்களையே தங்களுக்கும் இன்ப துன்பங்களாக இருக்கை அன்றோ தோழிமாராவது? இவள் மயிர்முடி பேணாதே நறுநாற்றங்காணில் முடியும்படியாக இருக்க, இவர்கள் கூந்தலைப் பேணி நறு நாற்றங்கொண்டு காரியங்கொள்ளப் போருமோ?’ என்னில், 2கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்கச் சாத்திக் கழித்தபடியே எல்லாவற்றையும் கொடுப்பது இவர்களுக்கே; அப்போது அவன் செய்த மிகுந்த திருவருளாலே, அது சருகு ஆனாலும் அவர்கள் மாறாதே வைத்துக்கொண்டு இருப்பார்களே! அது இவளுக்கு நினைப்பு ஊட்டுவதாய் நலிகிறபடி. அன்றிக்கே, ‘இவர்கள் தாம் நறுநாற்றங்கொண்டு காரியங்கொள்ளவும் வல்லர்கள்’ என்னுதல். என்றது, ‘தாங்கள் தளரந்து காட்டில் இவள் மிகவும் தளரும் என்று ஒப்பித்துக் கொண்டு இருப்பர்கள்’ என்றபடி. 3தங்கள் தங்களுடைய பொறாமையும் பாரார்களாயிற்று, இவளைப் பிழைப்பிக்கைக்காக. 

    4
அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பலகாலம் போகச்செய்தேயும், உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே. இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை? அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்கே வேணுமே. 5‘சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர், தங்கள் தங்களுடைய துக்கத்தைப்

_____________________________________________________________________

1. ‘ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ’

என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5:18.

2. மேலே ஒத்திருக்கையாலே நினைப்பூட்டுகிறது அருளிச்செய்தார். இங்கு, ஸம்பந்தி
  தரிசனத்தாலேயும் நினைப்பூட்டுகிறது என்று அருளிச்செய்கிறார், ‘கலவியில்’ என்று
  தொடங்கி.

3. ‘தங்களுக்குத் தளர்த்தி உண்டாயிருக்க, ஒப்பனை பொறுக்குமோ?’ என்னில்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தங்கள்’ என்று தொடங்கி.

4. ‘இவர்களாலே உஜ்ஜீவிக்க வேண்டுமோ? தானே உஜ்ஜீவிக்க ஒண்ணாதோ?’ என்ன,
  ‘ஆசாரியன் இல்லாவிட்டால் உஜ்ஜீவனம் உண்டோ?’ என்று அதற்குச்
  சுவாபதேசத்தாலே விடை அருளிச்செய்கிறார், ‘அகாரத்தின்’ என்று தொடங்கி.

5. ‘தங்கள் தங்களுடைய பொறாமையும் பரார்களாயிற்று’ என்று மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘சேஷிக்கு’ என்று தொடங்கி.