ப
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
2 |
117 |
பாரார்களே அன்றோ?
1பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய இரட்சணத்துக்காக
இளைய பெருமாள் தம்மைப் பேணிக்கொண்டு தரித்து இருக்குமாறு போலே. 2இளைய
பெருமாள் தாம் பரம்போகி அன்றோ? 3‘ஸௌமித்ரே பஸ்யபம்பாயா:- அங்குத்தை இனிமை
நெஞ்சிலே படச்செய்தேயும், பெருமாளுக்கு வேற் ஒன்றிலே நோக்கை விளைக்கைக்காக முகத்தை மாற
வைத்துக்கொண்டு நின்றார்; ‘பிள்ளாய், பாராய் இது இருந்தபடி!’ என்கிறார். நானம் கருங்குழல்
- 4ஒரு புலவன் ‘நானம் என்பது குழலுக்கு விசேஷணம் ஆகையாலே, நாவி போன்ற குழல்’
என்றான். அதனால் நினைக்கிறதும் நறுநாற்றத்தை.
தோழிமீர்காள் -
5பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவார் கோடியிலே புகுவதே! தோழிமீர்காள்!
அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!- 6தான் அறிந்து தோழிமார்க்குச் சொல்லாதே
இருப்பது ஒரு நிலையும், தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதே இருப்பது ஒரு நிலையும், தானும்
தோழியும் தாயும் அறிந்து பிறர் அறியாதே
__________________________________________________________________
1. இதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘பெருமாளிலும்’ என்று தொடங்கி.
2. ‘பெருமாளுடைய இரட்சணத்துக்காக’
என்பதற்கு, ‘இவர் தாம் பிரிவின் துன்பத்தைப்
பொறுக்கமாட்டதவரோ?’ என்ன, ‘இளைய
பெருமாள்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். ‘போகி’ என்பதற்கு, ‘இன்பத்தை
அனுபவிக்கிறேன்’
என்பதும், ‘பாம்பு’ என்பதும் பொருள்.
3. அப்படித் தரித்திருந்தமைக்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘ஸௌமித்ரே’ என்று
தொடங்கி.
‘ஸௌமித்ரே பஸ்ய
பம்பாயா: சித்ராஸூ வநராஜிஷூ
கிந்நரா நரஸார்த்தூல
விசரந்தி ததஸ்தத;’
இது. ஸ்ரீராமா. கிஷ்கிந். 1:60.
‘ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா:’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார். ‘அங்குத்தை’ என்று தொடங்கி.
இங்கே, கம்பராமாயணம்
பம்பாநதிப்படலம் 10 முதல் 35 முடியவுள்ள செய்யுள்களைப் படித்தறிதல் தகும்.
4. ‘நானம்’ என்பதற்கு,
கஸ்தூரி என்று வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்,
‘ஒரு புலவன்’ என்று தொடங்கி.
5. ‘தோழிமீர்காள்’ என்று
விளிக்கின்றவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
‘பிரியம்’ என்று தொடங்கி.
6. ‘தோழிமீர்காள்!
அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!’ என்று விளித்ததற்கு,
முன்னுரையில் அருளிச்செய்த கருத்தைத்
தவிர, வேறும் ஒரு கருத்து
அருளிச்செய்கிறார், ‘தான் அறிந்து’ என்று தொடங்கி.
|