பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இ

118

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இருப்பது ஒரு நிலையுமாயிற்று இருப்பது; அந்நிலை குலைந்து எல்லாரையும் ஒக்க விளிக்கும்படி ஆயிற்று உலகப் பிரசித்தமானபடி. 1பிறர்க்குச் சொல்ல வேண்டுவது இல்லை அன்றோ? ஆயிருக்க, பிரதி கூலர்க்குங்கூட அருள் பண்ணவேண்டும்படிகாணும் இவளுடைய துன்ப நிலை. 2‘மாம் ஸமாநய துக்கிதாம்-துக்கத்தை அடைந்திருக்க என்னை ஸ்ரீராகவனோடு சேர்ப்பாயாக’ என்கிறபடியே, ‘என்னை நீ பெருமாளுடனே கூட்ட வல்லையே’ என்றாளன்றோ இராவணனை? 3‘அப்படியே என் விஷயத்தில் அருள்செய்’ என்றும், ‘வாக்கினால் தருமத்தை அடையக்கடவாய்’ என்றும், ஒரு திருவடி போல்வார்க்குச் சொல்லக்கடவ வார்த்தையை அன்றோ, பிரித்தவனைப் பார்த்துச் சொல்லிற்று?

    எங்ஙனே நான் உகந்தது உகந்தீர்கோள்! என்பாள், ‘தோழிமீர்காள்!’ என்கிறாள். ‘எங்ஙனே எனக்குப் பிரியமான ஹிதத்தைப் பார்த்தீர்கோள்!’ என்பாள், ‘அன்னையர்காள்!’ என்கிறாள். ‘எங்ஙனே நொதுமலாளர்களாய் இருந்தீர்கோள்!’ என்பாள், ‘அயற்சேரியீர்காள்!’ என்கிறாள். ‘எங்கள் பக்கல் குறை உண்டோ? நீ மரியாதை தப்பினவாறே நாங்களும் முறை தப்பினோமித்தனை அன்றோ?’ என்ன, ‘நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்- 5‘உங்களுக்கும் இங்ஙனே ஏதேனும் இருப்பது ஒரு காரணம்

______________________________________________________________________

1. ‘அயற்சேரியில் உள்ளார்க்குத் தன் நிலையைச் சொல்லுவான் என்?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘பிறர்க்கு’ என்று தொடங்கி.

2. ‘இப்படிச் சொன்ன பேர் உளரோ?’ என்ன, மாம் ஸமாநய துக்கிதாம்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

        ‘ஸாது ராவண ராமேண மாம் ஸமாநய துக்கிதாம்
         வநே வாஹிதயா ஸார்த்தம் கரேண்வேவ கஜாதிபம்’

என்பது, ஸ்ரீராமா. சுந். 21:18.

3. ‘இதனால் பிரதிகூலர்க்கும் அருள் செய்ய வேண்டும்படி இருக்கம் என்று
  தோற்றிற்றோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அப்படியே’ என்று
  தொடங்கி.

        ‘ததா குரு தயாம் மயி’ என்பது, ஸ்ரீராமா. சுந்.
        ‘வாசா தர்ம மவாப்நுஹி’ என்பது, ஸ்ரீராமா, சுந். 39:10.

4. மூவரையும் விளிப்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘எங்ஙனே’ என்று தொடங்கி.

5. கருத்து அருளிச்செய்கிறார், ‘உங்களுக்கும்’ என்று தொடங்கி. இது, ‘கண்ணன்
  செங்கனிவாயின் திறத்தது’ என்றதிலே நோக்கு. இதனை விவரணம் செய்கிறார்.
  ‘நீங்களும்’ என்று தொடங்கி. இதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார்,
  ‘உங்கள் அளவு அன்று என்றபடி’ என்று.