என
|
124 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
என்னுதல். செங்கனி
வாயின் திறத்ததாயும் - 1‘பிரிந்து கடக்க இருக்கில் என்? உன் கண் வட்டத்திலே
கிடக்கில் என்? இது உன் சரக்கு அன்றோ?’ என்று சொல்லத்தொடங்கி, தழுதழுத்து வருகிற திருவதரத்திலே
அகப்பட்டபடி. 2அதிலும், அதரத்தில் பழுப்புக்குள் இழிய மாட்டுகிறது இல்லை.
வாயின் திறத்ததாயும் - 3அதுதான் ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் ஆகாதே? செஞ்சுடர்
நீள்முடி தாழ்ந்ததாயும் - 4பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதிராஜ்ய
சூசகமாய் ‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப்பட்டுக்
காலைப் பிடித்தது. சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் - 5பிரிந்தால் விரோதியைப்
போக்குகைக்குக் கருவியாய், வைத்த கண் மாற ஒண்ணாத அழகையுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் - 6‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப்புக்கு
மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக்கட்டின திருக்கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக்கொடுத்தது.
என்றது, ‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’
என்றபடி.
திங்களும் நாளும்
விழா அறாத - 7உத்தேசியமான பூமியிலே நித்தியோத்ஸவம் செல்லாநிற்க, அது இங்கே
நம் கண் வட்டத்தே துக்கத்துக்கு இலக்காய் இருக்குமோ! மாதத் திருநாளும் நாள்
____________________________________________________________________
1. செந்நிறம் தோன்றுவது
வார்த்தை் பேசும் போது ஆகையாலே, அங்ஙனம் பேசின
வார்த்தைகளை அருளிச்செய்கிறார், ‘பிரிந்து’
என்று தொடங்கி. கண் வட்டம்-கண்முன்.
2. ‘திறத்ததாயும்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘அதிலும்’ என்று தொடங்கி.
3. ‘திறம்’ என்றதற்குக்
‘கூட்டம்’ என்று வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்,
‘அதுதான்’ என்று தொடங்கி. ‘திறம்’
என்றதற்கு முன்னே கூறிய பொருள், ‘செயல்’
என்பது.
4. செங்கனிவாயில் ஈடுபட்டிருந்த
மனம், அதனை நீக்கித் திருமுடியில் ஈடுபடுவதற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘பிரிவினை’
என்று தொடங்கி.
5. சங்கொடு சக்கரம் கண்டு
உகக்கைக்குக் காரணம் அருளிச்செய்கிறார், ‘பிரிந்தால்’
என்று தொடங்கி.
6. ‘தாமரைக்கண்கள்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘உனக்கு’ என்று தொடங்கி.
‘தவாஸ்மி’ என்பது.
அநந்யார்ஹமாக - வேறு
ஒருவர்க்கு உரியளாகாதவனாக; என்றது, அவனுக்கே
உரிமைப்பட்டவளாக என்றபடி. அதனை விவரணம் செய்கிறார்
‘பிரிக்கிற போது’
என்று தொடங்கி.
7. ‘திங்களும்
நாளும் விழா அறாத’ என்ற விசேடணத்திற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘உத்தேசியமான’ என்று தொடங்கி,
அது - மனம்.
|