த
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
3 |
125 |
திருநாளும் ஓவாத. தென்திருப்பேரெயில்
வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு-இவ்விருப்பு நமக்கு ஆக்கிக்கொண்டிருக்கிற உபகாரகனுக்கு. என்றது,
1‘பரத்துவம், நித்திய முத்தர்கட்கு; வியூகம், முத்தரைப் போன்றவர்கட்கு; விபவம்,
புண்ணியம் செய்தார்க்கு’ இவ்விருப்பு, பாபம் செய்த சம்சாரிகளுக்காக அன்றோ?’ என்றபடி. என்
நெஞ்சம்- 2அவனுடைய உபகாரமும் அழகு முதலானவைகளும் வயிர உருக்கு ஆகை. 3நெஞ்சினுடைய
வன்மை அறிதி அன்றோ? 4‘நெஞ்சம் அவனும் ஒரு கோவையிலே அடைப்பு உண்டபடி. நங்கள்
பிரானுக்கு என் நெஞ்சம் - 5‘ஸ்ரீராகவனுக்குத் தகுந்தவள் ஸ்ரீஜனகராஜன் திருமகள்’ என்னுமாறு
போலே. தோழீ - 6நெஞ்சினைத் திருத்திக் கலப்பிக்கப்பட்ட வருத்தம் அறிதி அன்றோ’
7இப்போது நீயுங்கூட எதிர்த்தலையாம்படியன்றோ வாய்த்தது? நாணும் நிறையும்
___________________________________________________________________
1. ‘இங்கே இருக்கிற
இருப்பு நமக்காக இருக்குமோ?’ என்ன ஆம் என்று அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘பரத்துவம்’
என்று தொடங்கி.
2. ‘செங்கனிவாயின் திறத்ததாயும்’
என்பது போன்றவைகளைக் கடாட்சித்து, ‘என்
நெஞ்சம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘அவனுடைய’ என்று தொடங்கி.
வயிர உருக்கு வச்சிரத்தை உருக்கக் கூடியது. என்றது, ‘பெண்மையாலே,
ஒருவர்க்கும் ஈடுபடோம்’ என்றிருந்த நெஞ்சையும் உருக்கியது’ என்றபடி.
3. ‘என் நெஞ்சம்’ என்றதனோடே
‘தோழி’ என்பதனையும் கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார், ‘நெஞ்சினுடைய? என்று தொடங்கி.
4. ‘நங்கள் பிரான்’ என்றும்,
‘என் நெஞ்சு’ என்றும், தன்னோடு உரிமைப்படுத்திக்
கூறியதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘நெஞ்சும்’ என்று தொடங்கி. ‘ஒரு
கோவையிலே’ என்றது, ‘தன்னுடைய சம்பந்தம் தம் ஒத்திருக்கையாலே’
என்றபடி.
என்றது, அவனைப்போன்று எனக்குப் பரதந்திரமான மனம்’ என்பதனைத் தெரிவித்தபடி.
5. ‘என் நெஞ்சு’ என்றதற்கு,
‘பகவானிடத்தில் ஈடுபட்ட என் மனம்’ என்று வேறும் ஒரு
பொருள் அருளிச்செய்கிறார், ‘ஸ்ரீராகவனுக்கு’
என்று தொடங்கி. ‘ராகவோர்ஹதி
வைதே ஹீம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 16:5. என்றது, அடியார்கள்
விஷயத்தில், அவன்
மிகவும் அன்புடையனாயிருப்பான்’ இது, முந்துற்ற நெஞ்சாய், பகவத் விஷயத்தில்
ஈடுபட்டதாயிருக்கும்; ஆகையாலே, பரஸ்பரம் ஒப்புமை தெரிவித்தபடி.
6. மேலே ‘நெஞ்சினுடைய
வன்மை அறிதி அன்றோ?’ என்றதற்குச் சேர. பாவம்
அருளிச்செய்கிறார், ‘நெஞ்சினை’ என்று
தொடங்கி.
7. மனத்தின் வன்மையைத் தோழிக்குக் கூறுகிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘இப்போது’
என்று தொடங்கி.
|