அறுக
|
128 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
அறுக்குமாறு போலே, வரிசையும்
கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார். 1‘இந்த விபீஷணன் இராஜாவன்றோ?’
என்னுமாறு போலே, வரிசை பெற்றுத் திரியாநின்றார்.
2‘இராவணன்
முன்னே, அவன் சோற்றை உண்ட சுகசாரணர்கள் ஸ்ரீவிபீஷணாழ்வானை ‘ராஜா’ என்பான் என்?’ என்னில்
எழுத்து உரு அழியாதே கிடந்தாலும், புள்ளி குத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாறு போலே,
முடி கொடுக்குமவர் கையாலே வைக்கையாலே ‘ராஜா’ என்றார்கள். 3‘ஒன்றாலும் இராவணனுடைய
கொடுமையை அறிந்து வைத்துக் கூசாதே இங்ஙன் சொல்லுவான் என்?’ என்னில், ‘சித்திரம் குத்துமோ’
என்று இருந்தார்கள். 4‘நிலவரைக் கொண்டு வினை செய்யலாம்’ என்று தரம் கொடுப்பர்
அன்றோ? என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் -
___________________________________________________________________
1. இலங்கையை அழிப்பதற்கு,
ஸ்ரீ விபீஷணாழ்வானுக்கு முடி சூட்டியதை இதற்குத்
திருஷ்டாந்தமாகக் காட்டுகிறார். ‘இந்த விபீஷணன்’
என்று தொடங்கி. ‘ராஜஹ்யேஷ
விபீஷண;’ என்பது ஸ்ரீராமா. யுத். 28:27. இது, இராவணனைப் பார்த்துச்
சாரன் கூறியது.
‘தாரு லாமணி மார்ப!நின்
தம்பியே
தேரு லாவு கதிருந் திருந்துதன்
பேரு லாவு மளவினும்
பெற்றனன்
நீரு லாவு மிலங்கை
நெடுந்திரு.’
என்பது, கம்பராமாயணம், ஒற்றுக்கேள்விப்படலம்,
60.
2. ‘இராவணன் முன்னே விபீஷணனை
அரசன் என்னலாமோ?’ எனச் சங்கித்துப்
பரிஹரிக்கிறார், ‘இராவணன்’ என்று தொடங்கி. புள்ளி
குத்துதல்-எழுத்துகளின்
மேலே புள்ளி வைத்தல். மெய்யெழுத்துகள் எண்ணப்படாமை ஈண்டு
உளங்கோடல்
தகும். ‘உயிரல் எழுத்தும் எண்ணப் படாஅ’ என்பது, விதி,
(தொல்காப். பொருள்) ‘முடி
கொடுக்குமவர் கையாலே’ என்றது, ‘கூட்டு
ஒருவரையும் வேண்டாகொற்றவன் கையாலே’ என்றபடி.
3. ‘இப்படிச்சொன்னால்
அவன் நலியானோ?’ என்று சங்கித்துப் பரிஹரிக்கிறார்,
‘என்றாலும்’ என்று தொடங்கி.
4.
‘இவர்க்கும் வரிசை கொடுப்பதற்குக் காரணம் யாது?’ என்ன, ‘நிலவரை’ என்று
தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். என்றது, ‘இலங்கையை அழிப்பதற்கு
‘நிலவர்’ என்று ஸ்ரீவிபீஷ்ணாழ்வானுக்குப்
பெருமாள் வரிசை கொடுத்தார்;
இவளுடைய பெண் தன்மைக்குரிய அபிமானத்தை அழிப்பதற்கு நெஞ்சுக்கு
‘நிலவர்’ என்று இவன் வரிசை கொடுத்தான்’ என்றபடி.
|