பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1ந

மூன்றாந்திருவாய்மொழி - பா. 4

129

1நிறம் மீட்கப்போனாரும் நிறம் கொடுபோனாரோடு ஒத்தார். இத்தலையில் வெறுமை கண்டு போனதுவும் நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது. 2போவார் போவார் எல்லாரும் இத்தலைக்குக் காரியமாகக்காணும் போம் போது சொல்லிப் போவது! 3அவன் தானே ‘இத்தலையில் ஊற்று இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’ இது இத்தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று. 4நாம்தாம் அவர்களை வெறுக்கிறது என்?’ முத்தன் இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே, புக்கார் மீளாத தேசமான பின்பு. அங்கே ஒழிந்தார் - 5‘கடலுக்குக் குறை நிரப்ப வேணும்’ என்று திரியாநின்றார். 6‘பண்டு நெஞ்சு இழந்தவர்களும் வருந்தித் தரித்துச் சிலரோடே அவனுடைய செயல்களைச் சொல்லிக் கொண்டு இருந்திலர்களோ? நீயும் அப்படியே வருந்தியாகிலும் சிலரோடே காலம் கழிக்க வேண்டாவோ?’ என்ன, இனி உழ்ந்து ஆரைக்கொண்டு என் உசாகோ - என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச்சொல்லி நான் காலம்.

____________________________________________________________________

1. ‘அங்கே புக்காரையும்’ என்று தொடங்கி, மேலே அருளிச்செய்த வாக்கியத்தை
  விவரணம் செய்கிறார், ‘நிறம் மீட்கப் போனாரும்’ என்று தொடங்கி. இதனை
  விவரணம் செய்கிறார், ‘இத்தலையில்’ என்று தொடங்கி.

2. ‘இப்போது வாராதிருந்தவர்களை, இவளுக்காகப் போனார்கள் என்னக் கூடுமோ?’
  என்ன, ‘போவார்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. ‘ஆயின், அவன் எதற்காகப் போனான்? மனம் எதற்காகப் போயிற்று?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன்தானே’ என்று தொடங்கி. ஊற்றிருக்க
  வேணும் - காதல் மிதகிருக்க வேண்டும்.

4. ‘அங்கே’ என்பதற்கு, தேசம் என்று பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி
  அருளிச்செய்கிறார், ‘நாம்தாம்’ என்று தொடங்கி. ‘நோபஜநம்’ என்னும்
  இவ்வாக்கியத்தை முன்னே காண்க.

5. ‘அங்கே’ என்பதற்கு, இறைவினடத்திலே என்று, பொருள் அருளிச்செய்யத்
  திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார், ‘கடலுக்கு’ என்று தொடங்கி.

6. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘பண்டு’ என்று தொடங்கி. ‘நெஞ்சு
  இழந்தவர்கள்’ என்றது. ஸ்ரீஜனகராஜன் திருமகளை. ‘சிலரோடே’ என்றது.
  திரிசடையை.