பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

வ

மூன்றாந்திருவாய்மொழி - பா. 5

133

விடுங்கோள்,’ என்கிறாள். 1‘முனிகிறதுதான் என்னுடைய நலத்தைப் பார்த்தேயானால் என் நலத்திலே செல்லப்பாருங்கோள் என்கிறாள்.’

    முனிந்து சகடம் . . . . . . . . . . தோற்றேன் - 2என்னுடைய நினைவு தன்னைப் புத்தி பண்ணுங்கோள்; அவன் முனிவிலே அகப்பட்ட நான் இனி உங்கள் முனிவிற்கு மீளுவேனோ? 3ஹிதமுமாய்ப் பிரியமுமான முனிவிலே அகப்பட்ட நான், ஹிதம் இல்லாததுமாய்ப் பிரியம் இல்லாததுமான உங்கள் முனிவிற்கு மீளுவேனோ? முனிந்து சகடம் உதைத்து - முலை வரவு தாழ்த்தது என்று சீறி நீட்டின திருவடிகளுக்கு இலக்காய்ப் பொடிபட்டதாயிற்றுச் சகடம். 4‘முலைப்பாலை விரும்பினவராய்த் திருவடிகளை மேலே நிமிர்த்தார் அழுதார்’ என்கிறதன்றோ? மாயப்பேய் முலை உண்டு - ‘முலையை நினைத்துச் சீறினான்’ என்று முலை கொடுக்கத் தாய் வடிவு கொண்டு வந்த வஞ்சனையுடையவளான பேய்ச்சியை முடித்து. மருதிடைபோய் - ‘முலை உண்டால் தவழுமத்தனை அன்றோ? புறம்புநின்றும் வந்து.

___________________________________________________________________

1. ‘முனிகிற எங்களைக் ‘காட்டுமின்’ என்கிறது என்?’ என்ன, ‘முனிகிறது தான்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. முன் இரண்டு அடிகளுக்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘என்னுடைய’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘அவன் முனிவிலே’ என்று தொடங்கி.

3. ‘அதற்குக் காரணம் என்?’ என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார், ‘ஹிதமுமாய்’
  என்று தொடங்கி. என்றது, ‘அவன் முனிவு, அடியார்களுடைய விரோதி நீங்குதற்குக்
  காரணமாகையாலும், அதுதான் அடியார்களிடத்தில் வைத்த வாத்சல்யமாகையாலும்,
  ஹிதமுமாய் பிரியமுமாயிருக்கும்; உங்கள் முனிவு, சேஷி இருந்த இடத்திற்குச்
  செல்லுதல் சொரூபமாயிருக்க அதனைச் சொரூபவிருத்தம் என்று விலக்குகையாலும்,
  அதுதன் எனக்கு விருப்பம் இல்லாததாய் இருக்கையாலும், ஹிதம் இல்லாததாயும்
  பிரியமில்லாததாயும் இருக்கும்’ என்றபடி.

4. தாம் சொன்ன பொருளுக்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘முலைப் பாலை’ என்று
  தொடங்கி.

        ‘சிக்ஷேப் பரணா வூர்த்வம் ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத ஹ’

என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 6 : 1.

5. முன்பின் உள்ள பதங்கட்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘முலையுண்டாய்’ என்று
  தொடங்கி.