பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

நல

134

திருவாய்மொழி - ஏழாம் பத்து

நலிகை அன்றிக்கே, நின்ற இடத்தே நின்று தப்பாமல் கொல்ல நினைத்த மருதமரங்கள் இரண்டனையும் பொடிபடுத்தி. கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த - அசுர ஆவேசத்தாலே ஒன்று கனிந்த விளவாய், ஒன்று கன்றாய் நின்றது; அதிலே ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து இரண்டையும் முடித்த. கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் - 1அழியுமற்றையும் அழித்தான்: அழியாததனையும் அழித்தான். வன்மையாலே அழித்தான் அவற்றை; மென்மையாலே அழித்தான் இவளை. 2அவற்றின் கையிலே தான் அகப்படாமல் தப்பித் தன்னைத் தந்த உபகாரத்துக்கு எழுதிக்கொடுக்கிறாள் காணும் ‘பிரானுக்கு’ என்று, 3சேஷியான தன்னை உண்டாக்கி, என்னைச் சேஷத்துவத்தினுடைய எல்லையிலே நிறுத்தினான். 4‘என்னுடைய பல பிறவிகள் கடந்தன்’ என்கிற அவதாரங்களைப்போன்று பரப்புப்போருங்காணும் இவ்வவதாரத்தில் இவளைப் பெறுகைக்குச் செய்த செயல்களும் அவனுக்கு. 5அடியார்களிடத்துள்ள வாத்சல்யத்தின் காரியமான முனிவே அன்றோ?

    கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் - 6‘ஆகையால் வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று சொல்லப்

________________________________________________________________

1. ‘பெண்மை தோற்றேன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அழியுமவற்றவையும்’
  என்று தொடங்கி. ‘அழியுமவற்றை’ என்றது, விரோதிகள் ஆகையாலே அழிக்கைக்குத்
  தகுந்தவைகளான சகடம் முதலானவைகளை. அழியாதது-பெண்மை. ‘மென்மை’
  என்றது. சௌலப்பியத்தை.

2. ‘செய்த உபகாரம் ஏது?’ என்ன, ‘அவற்றின்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

3. இவ்வுபகாரத்தைக் கூறிய பின் ‘பெண்மை தோற்றேன்’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘சேஷியான’ என்று தொடங்கி.

4. ‘முனிந்து சகடம்’ என்று தொடங்கி, துஷ்டநிக்ரஹம் செய்த செயல்கள் பலவற்றைக்
  கூறியதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘என்னுடைய’ என்று தொடங்கி.

        ‘பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’

என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.

5. ‘அவனுடைய சீற்றத்துக்கு இவள் ஈடுபடக் கூடுமோ?’ என்ன, ‘அடியார்களிடத்துள்ள’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. மேலே கூறியனவற்றையெல்லாம் கூட்டிக்கொண்டு, ‘பெண்மை தோற்றேன்’
  என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஆகையால்’ என்று தொடங்கி.

    ‘அதோஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:’ என்பது, ஸ்ரீ கீதை, 15 : 18.

       
‘ஜாநாதி புருஷோத்தமம்’ என்பது, ஸ்ரீ கீதை, 15 : 19.