ப
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
5 |
135 |
படுகிறேன்’ என்றும்,
‘என்னைப் புருஷோத்தமன் என்று எவன் தெரிந்துகொள்ளுகின்றானோ’ என்றும் சொல்லுகிற தன்னுடைய
ஆண் தன்மையைக் காட்டிக்காணும் இவளுடைய பெண்மையைக் கொள்ளை கொண்டது. பெண்மை தோற்றேன் -
1தோலாதது தோற்றேன். முனிந்து இனி- 2இனி மீட்கலாம் என்றே நினைக்கிறது?
மீட்க நினைக்கிற நீங்கள் அவனுடைய வெற்றிச்செயல்கட்கு முன்னே அன்றோ மீட்கப்பார்ப்பது?
என் செய்தீர் - எனக்கு அநுகூலர்கள் ஆனீர் அல்லீர்; மீட்கத் தொடங்கினது தலைக்கட்டிற்று அன்று.
அன்னைமீர்காள் - 3பிறந்தது முதற்கொண்டு என் இயல்பினை அறிந்து போருகிற நீங்கள்
மீட்கப் பார்ப்பதே! 4அவன் செய்த உபகாரங்களை அறியாமல் அன்றோ நீங்கள்
பொடிகிறது? ‘அவன் செய்த உபகாரங்கள் மறக்க ஒண்ணாதாகில் நினைக்கிறாய்; பெற்று வளர்த்த
எங்களுடைய உபகாரமும் நினைக்க வேணுங்காண்!’ என்ன, முன்னி அவன் வந்து வீற்றிருந்த -உபகாரத்தில்
முற்பாடன் அவன் காணுங்கோள். முன்னி - முற்பாடனாய் நின்று; 5‘பூர்வஜ-முன்னே உண்டாவனவனே’
என்னும்படியே, என்னைப் பெறுகைக்குக் காலத்தை எதிர் நோக்கினவனாய்க்கொண்டு தன் வேறுபாடு தோற்ற
இருக்கிற. கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே - கொண்டு புக்குக் காட்டுவார் தாழ்வே; 6அங்குள்ளன
எல்லாம் பக்குவ பலமாக இருக்கும். 7கனிந்த மரம் கண்டால், ‘அசுர ஆவேசம் உண்டு’
என்று அஞ்ச
__________________________________________________________________
1. இழந்த நிறம் முதலானவைகளும்
இருக்க, ‘பெண்மை தோற்றேன்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘தோலாதது’ என்று தொடங்கி.
2. ‘இனி’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இனி மீட்கலாம்’ என்று தொடங்கி.
3. ‘அன்னைமீர்காள்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார் ‘பிறந்தது’ என்று தொடங்கி.
4. மேலுக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘அவன் செய்த’ என்று தொடங்கி.
5. அவன் அப்படி முற்பாடனாய்
இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பூர்வஜ’
என்று தொடங்கி. இது, ஜிதந்தா.
6. ‘அங்குள்ள எல்லாம் பக்குவபலமாக
இருக்கும்,’ என்றதன் கருத்து, ‘என்னை
அங்கீகரிப்பதற்குக் காலத்தை எதிர் நோக்கினவனாயிருக்கிறான்’
என்றபடி.
7. ‘கனிந்த
பொழில்’ என்கையாலே, கனிந்த விளவினின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார்,
‘கனிந்த மரம்’
என்று தொடங்கி. என்றது, ‘உகந்தருளின நிலம் ஆகையாலே
பகைவர்கள் இல்லை’ என்றபடி.
|