ஈ
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
6 |
137 |
ஈடு : ஆறாம் பாட்டு.
1‘நீங்களும் ‘கொடுபோவோமோ அல்லோமோ? என்று விசாரிக்கும் நிலை அன்றிக்கே,
எனக்குக் காதலானது அறமிக்கது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது; ஈண்டென என்னைத் தென்திருப்பேரெயில்
கொடுபுக்கு மகர நெடுங்குழைக்காதனைக் காட்டுங்கோள்’ என்கிறாள்.
காலம் பெற என்னைக்
காட்டுமின்கள் - 2குடிக்குப் பரிஹாரம் இல்லையாகிலும் எனக்குப் பரிஹாரம் இது அல்லது
இல்லை. இனி என்மேல் குற்றம் இல்லை. ‘என்? இப்படிக் கடுகவேண்டுவான் என்?’ என்னில், காதல்
கடலின் மிகப் பெரிதால் - இந்தக் காதல் அளவுபட்டோ இருக்கிறது? முதலில் சொன்ன வார்த்தையைக்
காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது. 3‘கடல் புரைய’ என்றாளே. 4ஒரு
காரியப்பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது? 5‘ஆனாலும்,
காதலை அளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுகவேண்டாவோ?’
என்ன, நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான் - 6நான் உங்கள் வழியே போகவோ,
இவன் வழியே போகவோ? என்னை
_________________________________________________________________
1. ‘காதல் கடலின் மிகப்
பெரிதால், திருப்பேரெயிற்கே, காலம் பெற என்னைக்
காட்டுமின்கள்’ என்பனவற்றைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
ஈண்டென-இப்போதே.
2. இத்திருப்பாசுரத்திலுள்ள
‘காலம் பெற’ என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘குடிக்கு’ என்று தொடங்கி.
3. ‘முதலில் சொன்ன வார்த்தை
யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘கடல் புரைய’ என்று தொடங்கி. இது திருவாய்,
5. 3:4.
4. ‘சாதன பத்தி போல அன்றிக்கே
இவர் பத்தி கரை புரண்டு இருக்கைக்குக் காரணம்
யாது?’ என்ன, ஒரு, ‘காரியப்பட்டாலே’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘ஒரு காரியப்பாட்டாலே விளைந்ததுபோல’ என்றது,
‘காரியத்தின்பொருட்டு
விளைந்த சாதனபத்தி போல’ என்றபடி சாதனபத்தி-சாதனமாய்
இருக்கும் பத்தி.
5. மேலுக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘ஆனாலும்’ என்று தொடங்கி.
6.
‘நீலமுகில் வண்ணத்து எம்பெருமான்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘நான்’
என்று தொடங்கி.
அதனை விவரணம் செய்கிறார், ‘என்னை அப்படி’ என்று
தொடங்கி. ‘அப்படிச் சேர்த்துவிட’ என்பதற்கு,
‘அந்தத் திருமேனியாலே
சேர்த்துவிடுகைக்காக’ என்பது நேர்ப்பொருள்; ‘அந்தப் பிரகாரம் சேர்த்துவிட’
என்பது
வேறும் ஒரு பொருள்.
|