அப
|
138 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
அப்படிச் சேர்த்துவிட
வந்து முன்னே நிற்க, நான் மீளும்படி என்? 1அப்படியாலே அவன் துவக்காநிற்க, உங்கள்
வார்த்தையைக் கேட்கவோ? 2சிரமத்தைப் போக்கும்படியான வடிவினைக் கொண்டு
முன்னே நின்று காதலை வளர்க்கின்றவனாகாநின்றான். 3இக்காதலை ஒருபடியே வளர்க்கிறது
அன்றோ? 4கடல் புரைய விளைவித்ததும் காரமர் மேனி அன்றோ? நிற்கும் முன்னே வந்து
- இவன் கிட்ட நின்றிலனாகில் நான் உங்கள் வார்த்தையைக் கேட்டு மீளேனோ? 5‘ஆனால்
உனக்குப் பொல்லாதோ?’ என்ன, என் கைக்கும் எய்தான் - அழகிது அன்றோ, எனக்கு இப்படித் தரப்பெறில்!
வார்த்தை சொல்லுதல், அணைத்தல் செய்யாமையே அன்று; என் கைக்கும் எட்டுகின்றிலன். ‘இனி நீ
செய்யப் பார்த்தது என்?’ என்ன, ‘உருவெளிப்பாடு அன்றியிலே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் தேசத்திற்குப்
போகப்பார்த்தேன்,’ என்கிறாள் மேல்:
ஞாலத்து அவன் வந்து
வீற்றிருந்த - 6தூரத்தே சென்று காண வேண்டாதபடி பரமபதத்தில் ஐஸ்வரியம் எல்லாம்
இங்கே தோற்றும்படி இருந்த. நான்மறையாளரும் வேள்வி ஓவா - வேதார்த்த வித்துகளும் சமாராதனத்திலே
எப்பொழுதும் ஈடுபட்டவர்களானார்கள். 7என்னோடு ஒத்தவர்களும். தங்கள் தங்களுக்கு
வகுத்த கைங்கரியம் பெற்று வாழாநிற்பார்கள். கோலம் செந்நெல் கவரி வீசும் கூடு
_______________________________________________________________
1. மேல் வாக்கியத்தால்
சொல்லப்பட்ட பொருள் வெளிப்படையாக அருளிச்செய்கிறார்,
‘அப்படியாலே’ என்று தொடங்கி. அப்படி
- ‘அந்தத் திருமேனி’ என்பது
நேர்ப்பொருள்.
2. ‘நீலமுகில் வண்ணத்து
எம்பெருமான்’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘சிரமத்தைப் போக்கும்படியான’ என்று
தொடங்கி.
3. ‘காதல்’ என்றதன்
பின், ‘நீலமுகில் வண்ணத்து’ என்று சொன்னதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இக்காதலை’ என்று
தொடங்கி.
4. திருமேனி காதலை
விளைப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘கடல் புரைய’ என்று
தொடங்கி. இது, திருவாய். 5. 3
: 4.
5. ‘என் கைக்கும் எய்தான்’
என்பதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘ஆனால்’
என்று தொடங்கி. ‘கைக்கும்’ என்ற உம்மையின்
பொருளை விரிக்கிறார், ‘வார்த்தை
சொல்லுதல்’ என்று தொடங்கி.
6. ‘ஞாலத்து வீற்றிருந்த
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘தூரத்தே’ என்று
தொடங்கி.
7.
‘வேள்வி ஒவா’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘என்னோடு’ என்று தொடங்கி.
‘ஒத்தவர்களும்’
என்றது, ‘வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கையாலே’ என்றபடி.
|