பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

140

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பேரெயில் என்ற திவ்விய தேசத்திலே புக்கு எனது நெஞ்சமானது தேடி மீண்டு வருதலை எங்கும் காண்கிறேன் இல்லை; தோழீ! இனி, இங்கு யாரை உடையோம்? சென்ற என் நெஞ்சினைக் கூவ வல்லாரும் இல்லை; இனி, யாரைக்கொண்டு என்ன பிரயோஜனத்தைச் சாதிப்பது? என் நெஞ்சம் கண்ட விஷயத்தையே நானும் கண்டேன்,’ என்கிறாள்.

    ஈடு :
ஏழாம் பாட்டு: 1‘இலக்குமணன் சென்ற வழியை நானும் பின்பற்றுகிறேன்’ என்ற பெருமாளைப்போலே இந்தப் பிராட்டியும் ‘என் நெஞ்சு, தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப்பேரெயில் புக்காற்போலே நானும் அங்கு புகுமத்தனை,’ என்கிறாள். மேல் பாசுரங்களில் கூறியவாறே முடிந்த பின்பு, ‘இனி, நான் செய்யப் பார்த்தது இது என்கிறாள்,’ என்னுதல்.

    பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் - மதிளுக்கு அழகாம்படி அம்மதிளைச் சூழ்ந்த கடலையுடைத்தாய், கேடக அஞ்சும்படியான ஊரை மூலை அடியே நடக்கச்செய்த உபகாரகன். பேர் எயில் - பெரிய மதிள். வந்து வீற்றிருந்த- 2அப்போது முகம் மாற வைத்த இழவுதீர அணைக்கலாம்படி கிட்டவந்திருக்கிற. 3‘விமல சசாங்க நிபாநநா’ என்கிறபடியே, எப்போது பெருமாள் முகம் வைக்க ஒண்ணாதபடி கொடியராய் இருந்தார்,

_____________________________________________________________________

1. ‘என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
  திருஷ்டாந்தத்தோடு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இலக்குமணன்’ என்று
  தொடங்கி.

        ‘அஹஞ்ச அநுகமிஷ்யாமி லஷ்மணேந கதாம் கதிம்’

என்பது, ஸ்ரீராமா, உத்தரகா.

      மேல் திருப்பாசுரத்தோடு இயைபு அருளிச்செய்கிறார், ‘மேல் பாசுரங்களில்’
  என்று தொடங்கி. கூறியவாறே முடிந்த பின்பு ‘என்றது ‘நிறம் தொடக்கமானவற்றையும்
  இழந்து, உசாத்துணையான நெஞ்சையும் இழந்து, தாய்மார் காட்ட ஒருப்படுகை
  இல்லாமல் தடைசெய்யுமளவான பின்பு’ என்றபடி.

2. ‘தென்னிலங்கை செற்றபிரான்’ என்றதனையும் கூட்டி, ‘வந்து வீற்றிருந்த’ என்றதற்கு
  பாவம் அருளிச்செய்கிறார். ‘அப்போது’ என்று தொடங்கி, அப்போது-இராவணனைக்
  கொன்ற பின்பு. ‘முகமாற வைத்த’ என்றது, ‘இவளுக்கு முகம் கொடாதிருந்த’
  என்றபடி. கம்பராமாயணம், யுத்தகாண்டம், மீட்சிப் படலம், 61 முதல் 68 முடிய உள்ள
  செய்யுள்களை இங்கு நோக்கத்தகும்.

3. ‘அவர்’ முகம் மாறவைத்த போது இவள் இருந்த பிரகாரம் எது?’ என்ன,
  இருந்ததற்குப் பிரமாணமும் அதற்குப் பொருளும் அருளிச்செய்கிறார், ‘விமல’
  என்று தொடங்கி.

        ‘வதாம்உதித பூர்ண’ சுந்த்ரகாந்தம் விமல ஸஸாங்க நிபாநநா ததாஸீத்’

என்பது, ஸ்ரீராமா, யுத்,. 117 : 36. எப்போது - யாதொரு போதிலே.