பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அவ

மூன்றாந்திருவாய்மொழி - பா. 7

141

அவ்வளவிலும் இவள் மறுவற்ற சந்திர மண்டலம் போலே 1முகத்தில் குளிர்ச்சி மாறாதே இருந்தாள். 2‘கண் நோய் கொண்டவனுக்கு விளக்குப்போன்று எனக்குப் பிரதிகூலமாய் இருக்கிறாய்; நிச்சயம்’ என்பது பெருமாள் திருவார்த்தை. 3‘கண்களின் தோஷத்தால் வந்தது போக்கி, விளக்கின் தோஷத்தால் வந்தது அன்று,’ என்று இதற்கு ஆளவந்தார் அருளிச்செய்வார். 4பகைவர்களைக் கொன்று அதனாலே விடாய்த்து வந்திருப்பார், 5‘கணவனைத் தழுவிக்கொண்டாள்’ என்கிறபடியே, குளிர்ந்த உபசாரங்களைச் செய்வதற்குப் போக வேணும். பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் - அவன் இருந்த திருப்பேரெயிலே புக்குத் தேடி என் நெஞ்சமானது ஓரிடத்திலும் மீண்டு வரக் காண்கின்றிலேன். 6மீள ஒண்ணாத இலங்கையிலே புக்க திருவடியும் மீண்ட வந்தான்; அணித்தான இவ்வூரிலே புக்க என் நெஞ்சமானது மீண்டு வரக் காண்கின்றிலேன்! 7நெஞ்சுங்கூத வாராத பின்பு அவன்

_____________________________________________________________________

1. முகத்தில் குளிர்ச்சி மாறாமைக்குக் காரணம், பல காலம் பிரிந்திருந்து சேவிக்கப்
  பெற்றதாலுண்டாய பிரீதியும், வேறு ஸ்பர்சதோஷம் இல்லாமையும், ‘சேஷியின்
  விநியோக பிரகாரம் கொண்டு காரியம் என்?’ என்கிற நினைவும் என்க.

2. அவர் முகம் மாறவைத்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘கண் நோய்’
  என்று தொடங்கி.

        ‘தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம்’

என்பது, ஸ்ரீராமா. யுத். 118:17.

3. திருஷ்டாந்த பலத்தாலே, பிராட்டிக்குத் தோஷம் இன்மை தோற்றுகிறது என்கைக்கும்
  பரமாசாரியருடைய சம்வாதம் காட்டுகிறார், ‘கண்களின்’ என்று தொடங்கி.

4. ‘இலங்கை சென்ன பிரான் வந்து வீற்றிருந்த திருப்பேரெயில் போகவேண்டும்’
  என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘பகைவர்களை’ என்று
  தொடங்கி.

5. ‘பர்த்தாரம் பரிஷஸ்வஜே’ என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய, 30 : 40.

6. ‘பேரெயிற்கே’ என்றதிலேயுள்ள ஏகாரத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மீள
  ஒண்ணாத’ என்று தொடங்கி.

7. ‘தூதான நெஞ்சு வாராமையாலே, அவன் வாராமை சொல்ல வேண்டா,’ என்கிறாள்
  ‘நெஞ்சுங்கூட’ என்று தொடங்கி.