வ
|
142 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
வாராமை சொல்லாவேண்டா
அன்றோ? 1நெஞ்சினது வரவு பார்த்துக் கண் மறைந்துகாணும் இவள் நிற்கிறது. அன்றிக்கே,
‘கண்டு ஜீவியாமல் நான் இங்ஙனே முடிந்து போமித்தனையன்றோ?’ என்னுதல்.
2‘நாதன்
வருந்துணையும், அவனுக்காக அவன் செயல்களைப் பாடிக்கொண்டு தரித்திருக்க வேண்டாவோ?’ என்னில்,
ஆரை இனி இங்கு உடையும் தோழீ! - 3நெஞ்சும் இல்லாத அன்று இனியார் உளர்? தோழீ
- ‘நெஞ்சில் அண்ணியன் நானோ?’ என்றாயாகில், 4நீ நீ ஆனாயே. 5‘இப்போது
நான் இங்கு இல்லையோ? உன் நெஞ்சினை அழைத்துக்கொள்ளுவதற்கு என்?’ என்ன, என் நெஞ்சம் கூவ
வல்லாரும் இல்லை - நெஞ்சினை மீட்கைக்கு நீ வேணுமோ? 6நெஞ்சினை அவனுக்கு ஆக்கின
நீ வேணுமே எனக்கு ஆக்கும்போதும்; 7உன் நிலை இது; உனக்குக் கால்கள் நடை தாரா:
8அல்லாதார்க்குக் ‘கூட்டவேணும்’ என்னும் விரைவு இல்லை: யார் நெஞ்சினை அழைப்பார்?
ஆரை இனிக்கொண்டு என்சாதிக்கின்றது- யாரைக்கொண்டுதான் சாதிப்பது? இனிச் சாதிக்க வேண்டுவதுதான்
ஏது? 9நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான்தான் உண்டாக வேணுமே? இங்கு வெறுந்தரையாய்
அன்றோ கிடக்கிறது?
_____________________________________________________________________
1. ‘மாட்டேன்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘நெஞ்சினது’ என்று தொடங்கி.
கண் மறைந்து-கண் பூத்து.
2. ‘ஆரை இனி’ என்பதற்கு
அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘நாதன்’ என்று தொடங்கி.
3. ‘இனி’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘நெஞ்சும்’ என்று தொடங்கி.
4. ‘நீ நீ ஆனாயே’ என்றது, ‘நீ
தோழியாம்படியாயே இருந்தாய்’ என்றபடி. அதாவது,
‘என் துக்கத்தைக் கண்டு எனக்கு முன்னே
தளர்ந்து கிடந்தாய்’ என்றபடி.
5. ‘இப்போது நான் இங்கு
இல்லையோ?’ என்றது, தோழி வார்த்தை.
6. ‘நெஞ்சினை மீட்கைக்கு
நான் வேண்டுமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நெஞ்சினை’ என்று தொடங்கி.
7. ‘நான் மாட்டேனோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உன் நிலை’
என்று தொடங்கி.
8. ‘வேறு சிலரைக் கொண்டு
அழைத்துக்கொண்டாலோ?’ என்ன, ‘அல்லாதார்க்கு’
என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
9. ‘‘ஆரை இனியிங்கு உடையம்?’ என்றதற்கும், யார் இனிக்கொண்டு’ என்றதற்கும்
வேற்றுமை யாது?’ என்ன,
‘நெஞ்சும் அவனும்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். என்றது, ‘மேலே தோழியும்
இல்லை என்றாள்; இங்கே தானும்
இல்லை என்கிறாள்,’ என்றபடி.
|