ஈ
|
144 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
ஈடு :
எட்டாம் பாட்டு. 1‘எனக்கு ‘அவனைக் காணவேணும்’ என்னும் காதல் கடலின் மிகப் பெரிது’
என்னுமளவு அன்றிக்கே, அற மிக்கது, ஆன பின்பு, நீங்களாக அசையீர்கோளாகில், தன் வேண்டற்பாடு
தோன்ற எழுந்தருளியிருக்கிற தென்திருப்பேரெயிலை நான் சென்று சேர்வன்’ என்கிறாள்.
கண்டதுவே கொண்டு
- 2அவன் பேர் சொல்லுதல், ‘தலையில் வணங்கவுமாங்கொலோ?’ என்று ஒரு வணக்கஞ்செய்தல்
செய்யுமன்றோ? அவ்வளவினையே கொண்டு; 3புற இதழ் கண்டு படுகிறபடி இதுவானால், அகவாயில்
ஓடுகிறது அறியில் என்படுவார்கள்? எல்லாரும் கூடி - 4பரிவரோடு, நலத்தை
விரும்புமவரோடு, ‘இவை இரண்டுந்தான் என்?’ என்று இருப்பாரோடு வாசி அறக்கூடி. 5பிறரைப்
பழி சொல்ல என்னில், தம்மில் தாம் சேராதவர்களும் சேர்வார்கள் அன்றோ? கார்க்கடல் வண்ணனோடு
என் திறத்துக் கொண்டு - 6இவள் நிறம் பசலை நிறமாம் போது, அவன் திறத்தே இழந்ததாக
வேண்டாவோ? கடல் ஏறி வடிந்த இடம் என்று தோற்றுகிறத் இல்லையோ? 7என் செயலைச்
சிரமத்தைப் போக்குகிற நிறத்தையுடையவனோடே கூட்டி. அலர் தூற்றிற்றது முதலாக்கொண்ட என் காதல்
உரைக்கில் - இவர்கள் பேசாமலே இருந்தார்களாகில் நானும் சுகமே இரேனோ? நான் பழிக்கு அஞ்சி
மீளுவேன் என்றுகாணும் இவர்கள் பழி சொல்லப் புக்கது. அலர் தூற்றிற்று - அலர் தூற்றினார்கள்.
அது முதலாக் கொண்ட என் காதல் -
_______________________________________________________________________
1. ‘மண் திணி ஞாலமும்’
என்றது முதல் ‘சேர்வன் சென்றே’ என்னுமளவும்
கடாட்சித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘கண்டதாவது நாது?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன் பேர்’
என்று தொடங்கி. ‘தலையில்’ என்பது, திருவாய்.
5. 3 : 7.
3. ‘கண்டதுவே’ என்ற ஏகாரத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘புற இதழ்’
என்று தொடங்கி.
4. ‘எல்லோரும்’ என்றதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘பரிவரோடு’ என்று
தொடங்கி.
5. ‘அயற்சேரியார் கூடுவார்களோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பிறரை’ என்று தொடங்கி.
6. ‘கார்க்கடல் வண்ணனிடத்தில்
இவள் அன்பு கொண்டவளானாள் என்பதனை
அறிந்தபடி என்?’ என்ன, அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘இவள் நிறம்’
என்று தொடங்கி. அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘கடலேறி’ என்று
தொடங்கி.
7. பதப்பொருள் அருளிச்செய்கிறார்,
‘என் செயலை’ என்று தொடங்கி.
|