1அ
|
மூன்றாந்திருவாய்மொழி - பா.
8 |
145 |
1அதுதானே
அடியாகக் கொண்ட என் காதலானது நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது. தன் காதலைத் தன்னாலும்
சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள். 2‘எதனின்று வேதங்கள்
மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும் இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி.
3இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?
4‘சுடர் ஞான இன்பம்’ என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து, ‘அதனிற்பெரிய
என்னவா’ என்றார் அன்றோ?
தோழீ - 5‘இந்தக்
காதலை விளைக்கைக்கு நீ செய்யும் கிருஷி அறிதி அன்றோ? இது 6இருந்தபடி பாராய்.
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிது - 7‘காதல், கடலின்
மிகப்பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்; ‘ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில்,
பெரியவற்றில் பெரியது என்னுமித்தனையல்லது, ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை. மண்ணாலே
_____________________________________________________________________
1. ‘அதுதானே அடியாகக்கொண்ட
என் காதல்’ என்ற இடத்தில் ‘ஊரவர் கவ்வை’
என்றி திருவாய்மொழிப் பாசுரம் 5. 3 : 4 நினைவு
கூர்க.
‘ஊரவர் கவ்வை
எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.’
என்பது திருக்குறள்.
2. சொல்லி முடிக்க ஒண்ணாமையின்
எல்லையை அருளிச்செய்கிறார், ‘எதனினின்று’
என்று தொடங்கி. ‘யதோவாசோ நிவர்த்தந்தே’ என்பது,
தைத்தீரியம்.
3. ‘பேச்சுக்கு நிலம் அல்லாமைக்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார் ‘இந்தக்
காதலுக்கு’ என்று தொடங்கி. விளாக்குலை கொள்ளுதல்
கபளீகரித்தல்.
4. ‘அதனையும் விளிக்குலை
கொள்ளாவற்றோ?’ என்ன, ‘சுடர் ஞான இன்பம்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
இது திருவாய். 10. 10 : 10.
5. ‘தோழீ’ என்று
விளிக்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘இந்தக்
காதலை’ என்று தொடங்கி.
6. மேலுக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘இது இருந்தபடி பாராய்’ என்று.
7. ‘முன்பு
‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்று சொன்ன நீ, இப்பொழுது இப்படிச்
சொல்லுவது என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘காதல் கடலின்’
என்று தொடங்கி.
|