பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

மூன்றாந்திருவாய்மொழி - பா. 9

147

    பொ - ரை : ‘என்னுடைய தோழிமீர்காள்! அன்னையர்காள்! என்னைத் தேற்றவேண்டா; இந்த நிலைக்கும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் உண்டு? நெஞ்சம் நிறையும் எனக்கு இங்கு இல்லை; மேகம் போன்ற நிறத்தையுடையவனும் கரிய கடல் சூழ்ந்த உலகத்தைப் புசித்த கண்ணபிரானுமான எம்பெருமான் வந்து எழுந்தருளியிருக்கின்ற அழகிய வளப்பம் பொருந்திய பார்ப்பதற்கு இனிய வயல்கள் சூழ்ந்த மருதநிலங்களையுடைய தென்திருப்பேரெயில் என்னும் மாநகரைச் சென்று சேர்வன்,’ என்கிறாள்.

    வி-கு :
‘வீற்றிருந்த திருப்பேரெயில்’ என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசை நிலை.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘நீங்கள் இனி என்னைத் தேற்றிப் பிரயோஜனம் இல்லை; தென் திருப்பேரெயிலைப் போய்ப் புகக்கடவேன்,’ என்கிறாள்.

    சேர்வன் சென்று - 2‘உன் ஆற்றாமையாலே சில சொல்லுகிறயாகில் இது கடைப்படவற்றோ?’ என்ன, ‘அவசியம் அங்கே புக்கு அல்லது விடேன்!’ என்கிறாள். என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் - 3எனக்காக இருப்பாரும், என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும் ஒன்றும் சொல்ல வேண்டா. 4தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லைகாணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு. அறிவில்லாத மாக்களோ ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்? 5விஷயம் காரணமாக வருகின்றதனைச் சாதனத்தில் செலவு எழுதுகின்றவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்? இவள்,

______________________________________________________________________

1. ‘அன்னையர்காள்! என்னைத் தேற்ற வேண்டா. தென்திருப்பேரெயில் மாநகர்
  சேர்வன் சென்று’ என்பதனைக் கடாட்சித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. இத்திருப்பாசுரத்திலும், ‘சேர்வன் சென்று’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘உன் ஆற்றாமையாலே’ என்று தொடங்கி. கடைப்படவற்றோ - நிறைவேற
  வல்லதோ?

3. ‘என்னுடைத் தோழிமீர்காள்’ என்று விசேடிப்பதற்கும் ‘அன்னையர்காள்’ என்று
  மரியாதையோடு விளிப்பதற்கும் பாவம் அருளிச்செய்கிறார், ‘எனக்காக’ என்று
  தொடங்கி.

4. ‘தோழிமார்க்கும் தேற்றப் போகாதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘தோழிமாரோடு’ என்று தொடங்கி.

5. ‘விஷயம் காரணமாக’ என்னும் இவ்விடதில் 5-ஆம் பத்து 5-ஆம் திருவாய்மொழி,
  வியாக்கியானம் பார்க்க.