தன
|
148 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
தன்னை மறந்து,
அவனையே பார்த்துப் பேசுகிறாள்; அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத்
தேடுகிறார்கள். நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு - 1கலங்கினாரோ தெளிந்தாரைத்
தேற்றுவார்? நீங்கள் நிற்கிற நிலை எது? என் நிலை எது? போகையிலே துணிந்திருக்கிற என்னை,
‘புறப்படுகை பழி’ என்று இருக்கின்ற நீங்கள் சொல்லுவது என்? இதற்கு - எனக்கு ஓடுகிற நிலைக்கு.
‘ஆனாலும், நெஞ்சும்
அடக்கமுமுடையார்க்கு இது வார்த்தையோ? நாங்கள் சொன்னபடி செய்து எங்கள் வழியே ஒழுக வேண்டாவோ?’
என்ன, ‘நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை; 2அது வேணுமாகில் அங்கே போய்ச்
சொல்லுங்கோள். 3மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு - அடக்கம். நெஞ்சு
- அது இட்டுவைக்கும் கலம். நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம்படியோ அவன் படி இருக்கிறது? கார் வண்ணன்
- 4தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாதபடியாக வடிவைப் படைத்தவன்.
‘வெறுவடிவழகேயோ உள்ளது?’ என்னில், கார்க்கடல் ஞாலம் உண்ட - 5‘தளர்ந்தார் தாவளம்,
ஆபத்து வந்தால் காப்பாற்றிவிடும் அத்தனையோ?’ என்னில், கண்ணபிரான் - தன்னைப் பிறர்க்கு
ஆக்கி வைக்கும் உபகாரகன். வந்து வீற்றிருந்த-தன் செல்வம் எல்லாம் தோற்றும்படி இருந்த. ஏர்வளம்
ஒண் கழனிப் பழனம் தென்திருப்பேரெயில் மாநகரே - ஏரினுடைய நிறைவினையுடையனவாய், அழகியனவான
கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைய திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேன். 6உங்கள்
தடைக்கு மீளுதல், அவ்வழியில் நிற்றல் செய்யேன். என்னைத் தேற்ற வேண்டா.’ வளம் - மிகுதி.
(9)
____________________________________________________________________
1. நீர்கள்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘கலங்கினாரோ’ என்று தொடங்கி.
இதனை விவரணம் செய்கிறார்,
‘நீங்கள்’ என்று தொடங்கி.
2. ‘இங்கு இல்லை’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘அது வேணுமாகில்’ என்று
தொடங்கி.
3. ‘கார்வண்ணன்’ என்றதனை
‘நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை’
என்றதனோடே கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்,
‘மனமும்’ என்று தொடங்கி.
4. ‘தோழிமீர்காள்,
அன்னையர்காள்’ என்றதனோடே கூட்டி வேறும் ஒரு பாவம்
அருளிச்செய்கிறார், ‘தாய்மார்’ என்று தொடங்கி.
5. தளர்ந்தார் தாவளம்-தளர்த்தவர்கட்கு
ஆதாரம்.
6.
‘சென்று சேர்வன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘உங்கள்’ என்று தொடங்கி.
|