பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

மூன்றாந்திருவாய்மொழி - பா. 11

153

கொள்ளமவன். 1‘இதற்குப் பயன் என்?’ என்னில், வையம் காக்கும்-உலகத்தைக் காப்பாற்றுதல். 2அப்படியே காத்திலனாகில் இப்படி நம்புவார் இல்லையே, இவனை ‘இரட்சகன்’ என்று, ஆழி நீர் வண்ணனை - 3நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. 4வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும் அசாதாரண விக்கிரகத்தைச் சொல்லுகிறது. அச்சுதனை - 5அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல். பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல். அணி குருகூர் -ஆபரணமான திருநகரி. கேழ் இல் அந்தாதி - ஒப்பு இல்லாத அந்தாதி. 6தம்மாலும் பிறராலும் மீட்க ஒண்ணாதபடி பகவத் விஷயத்தில் உண்டான உறுதியைச் சொன்ன பத்து ஆகையாலே, ஒப்பு இன்றிக்கே இருக்கிறபடி. ஓர் ஆயிரத்துள் திருப்பேரெயில் மேய இவை பத்தும் - ஒப்பு இல்லாத ஆயிரத்துள் திருப்பேரெயிலிலே சேர்ந்த இப்பத்தைக் கொண்டு. ஆழி அம் கையனை ஏத்த வல்லார் - 7‘இவை எல்லாவற்றாலும் என் சொல்லியவாறோ?’ எனின், கையும் திருவாழியுமான

___________________________________________________________________

1. இதற்கு - வேறுபடக் கொள்ளுவதற்கு.

2. ‘ஊழிதோறு ஊழி’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘அப்படியே’ என்று
  தொடங்கி. அப்படியே - அந்தப்படியலே. இப்படி - இந்தப் பூமியிலே. படி -
  பிரகாரமும், விக்கிரகமும், பூமியும்.

3. ‘வையங் காக்கும்’ என்றதன் பின் ‘ஆழிநீர் வண்ணனை’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘நோக்காதே’ என்று தொடங்கி.

4. ‘வேறவன்’ என்றதனைக் கடாட்சித்து, ‘ஆழிநீர் வண்ணனை’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘வேறுபடாதே’ என்று தொடங்கி.

5. மேலே கூறிய பொருளுக்கு ஏற்ப, ‘அச்சுதன்’ என்றதற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘அவ்வடிவு தனக்கு’ என்று தொடங்கி. ‘வையங் காக்கும்’
  என்றதனைக் கடாட்சித்து வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார், ‘பற்றினாரை’
  என்று தொடங்கி.

6. ஒப்பு இல்லாமைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘தம்மாலும்’ என்று தொடங்கி.

7. இவை எல்லாவற்றாலும் - இத்திருவாய்மொழி பத்துத் திருப்பாசுரங்களாலும்.