அழக
154 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
அழகிலே இவர் அகப்பட்ட
படியைத் தெரிவித்தபடி. 1அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை;
2இது கை மேலே அனுபவித்துக் காணலாமே. 3அவர் அடிமைத் திறத்து ஆழியாரே -
அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையையுடையவர் என்னுதல்; அடிமை இடையாட்டத்தில்
ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.
(11
)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
வெள்ளியநா மங்கேட்டு
விட்டகன்ற பின்மோகம்
தெள்ளியமால் தென்திருப்பேர்
சென்றுபுக - உள்ளமங்கே
பற்றிநின்ற தன்மை
பகருஞ் சடகோபற்கு
அற்றவர்களை தாமாழி
யார்
(63)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
__________________________________________________________________
1. ‘தாமரைக் கண்ணன்’ என்றும்,
‘செங்கனிவாய்’ என்றும், செஞ்சுடர் நீண்முடி’
என்றும் சொல்லப்பட்டனவே?’ எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘அல்லாத’ என்று தொடங்கி. ஒரு படியும்-ஒரு தட்டும்.
2. ‘அது எப்படி?’ என்ன,
‘இது கைமேலே’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
3.
‘அடிமைத் திறத்து ஆழியாரே’ என்பதற்கு, இரு வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். முதற்பொருளில்,
திறம் - கூட்டம்; ஆழியார்-திருவாழியின்
தன்மையையுடையவர். இரண்டாவது பொருளில், திறம்-செயல்;
ஆழியார் -
ஆழ்ந்தவர்கள்.
|