ந
நான்காந்திருவாய்மொழி
- ‘ஆழி எழ’
முன்னுரை
ஈடு :
1மேல் திருவாய்மொழியிலே, பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினையுடையரானபடி
சொல்லிற்று: 2மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக்
கொடுத்து மாற்றுதல், ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ? 3‘இனி
இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று பார்த்தருளி, ‘ஒன்று கொடுக்கலாவது இதற்குமேல் இல்லை அன்றோ?ய
என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு
அனுபவித்து உவகை அடைகிறார். 4அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு
உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத ‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார்
அன்றோ இவர்தாம்! தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ? இப்படி இவர்
தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி இவருடைய இழவு எல்லாம்
தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக்கட்டுகிறார். 5இறந்த காலத்தில் உள்ளவை
அடங்கலும் சம காலத்திற்
_____________________________________________________________________
1. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் இயையு அருளிச்செய்கிறார்,
‘மேல் திருவாய்மொழியிலே’ என்றது முதல்
‘உவகையடைகிறார்’ என்றது முடிய.
2. விஜய பரம்பரைகளைக்
காட்டிக் கொடுத்ததற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘மேல் திருவாய்மொழியில்’ என்று தொடங்கி.
3. மாற்றும் பிரகாரத்தை
அருளிச்செய்கிறார், ‘இனி இவர்க்கு’ என்று தொடங்கி. விஜய
பரம்பரை -வெற்றியின் தொடர்ச்சி!
ஒன்றன் பின் ஒன்றாகச் செய்த வெற்றிச்
செயல்கள். பத்தும் பத்தாக-பத்துத் திருப்பாசுரங்களிலும்,
என்பது நேர்ப்பொருள்.
‘நன்றாக’ என்பது, தொனிப்பொருள்.
4. ‘கலவி நிமித்தமாகத்
துக்கப்படுகிற இவர்க்கு விஜய பரம்பரைகளைக் காட்டிக்
கொடுத்தால் தீருமோ?’ என்ன, ‘அவனுக்கு
உறுப்பாமன்று’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். அதனை விவரணம் செய்கிறார்,
‘தம்மை’
என்று தொடங்கி.
5. ‘முற்காலத்தில்
நடந்த காரியங்களை இப்போது கண்கூடாகக் காணுமாறு யாங்ஙனம்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இறந்த காலத்தில்’ என்று தொடங்கி.
|