அப
|
178 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
அப்பன் ஆழ்துயர் செய்து
- நரசிங்கத்தினுடைய 1மொறாந்த முகத்தைக் கண்டபோதே, மேல் போய் அனுபவிக்கக்கூடிய
அனுபவமடைய அப்போதே அனுபவித்து அற்றான். என்றது, ‘பல காலம் பகவத் பாகவத விஷயங்களிலே செய்து
போந்த தீமை முழுதினையும் அரைக்கணத்திலே அனுபவித்து அற்றபடி. மிகவும் துக்கத்தை விளைத்து.
2அசுரரைக் கொல்லுமாறே-அசுரனைக் கொன்றபடி. ‘இதனால், என் சொல்லியவாறோ?’ எனின்,
‘எல்லார்க்கும் பொதுவாளனாய் நிற்கும் நிலை ஒழிய. தாய்தந்தையர்கள் முகமாகக் குழந்தைகள்
பக்கலிலே வத்சலனாய் நிற்பது ஒரு நிலையும் உண்டு அன்றோ? அது குலைந்தால், அவன் பகைவனாயும் நிற்கும்
அன்றோ? அப்போதும் இவன்தான் முன்னின்று பாதுகாப்பான்’ என்பதனைத் தெரிவித்தபடி. 3இத்தாலும்
சொல்லிற்றாயிற்று, ஆபத்துக் கனத்ததனையும் கடுக வந்து இரட்சிக்கும் என்கை. 4தமப்பன்
பகையாக உதவினவன், அவனில் அண்ணியனான தான் தனக்குப் பகையானால் உதவச் சொல்ல வேணுமோ?
5‘தனக்குத் தானே அன்றோ பகைவன்?’ என்கிறபடியே, தனக்குத் தானே பகைவன்.
(6)
________________________________________________________________________
1. மொறாந்த - தூறு மண்டின.
2. ‘அசுரரை’ என்பது, ‘காமரை
வென்ற கண்ணோன்’ (திருக்கோவையார். 164.)
என்புழிப் போன்று ஒருமையின்கண் வந்தது.
அசுரரை-அசுரனை; இரணியனை.
3. பலித்த பொருளாலே
போதரும் பொருள் அருளிச்செய்கிறார், ‘இத்தாலும்’ என்று
தொடங்கி.
4. இரணியன் வதையைச்
சொல்லுவதற்குப் பிரயோஜனத்தை அருளிச்செய்கிறார்,
‘தமப்பன்’ என்று தொடங்கி.
5. தனக்குத்தான் பகைவன்
என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘தனக்கு’ என்று
தொடங்கி.
‘உத்தரேத் ஆத்மநா
ஆத்மாநம் நஆத்மாநம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹி ஆத்மநோ
பந்து; ஆத்மைவ ரிபு: ஆத்மந:’
என்பது, ஸ்ரீ கீதை, 6 : 5.
‘நன்னிலைக்கண் தன்னை
நிறுப்பானும் தன்னை
நிலைக்கலக்கிக்
கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்த்து
நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும்
தான்.’
(நாலடியார்)
என்னும் செய்யுள், பகவத்
கீழைச் சுலோகத்தின் பொருளோடு ஒரு புடை
ஒப்புமையுடைத்தாம்.
|