பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

188

திருவாய்மொழி - ஏழாம் பத்து

மாயிற்று. நன்றி புனைந்து ஓர் ஆயிரம் - 1சர்வேஸ்வரனுடைய பரத்துவ சௌலப்பியங்களை வகையிட்டுத் தொடுத்த ஆயிரம் 2நன்மையாவது, சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வஸ்மாத்பரன் என்றும், சர்வ சுலபன் என்றும், சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ? 3அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச்செய்தது? அன்றிக்கே, 4‘எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும்’ என்னுதல். மேவிக் கற்பார்க்கு வென்றி தரும் - ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும். 5செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாகவுள்ளனவற்றை வென்று கொடுக்கும்; கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்; பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு

_______________________________________________________________________

1. ‘நன்றி புனைந்த’ என்றதன் பொருள், ‘சர்வேஸ்வரனுடைய’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

2. ‘‘நன்றி’ என்பது, பரத்துவம் முதலானவைகளைக் காட்டுமோ?’ என்ன, ‘நன்மையாவது’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். சர்வ சமாஸ்ரயணீயன்-எல்லா
  ஆத்துமாக்களாலும் அடையப்படுகிறவன்.

3. ‘அப்படிச் சொல்லிற்றோ?’ என்ன, ‘அவையே அன்றோ’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்.

4. ‘நன்று’ என்பதனை, ‘ஆயிரத்து’க்கு அடைமொழியாக்கிப் பொருள்
  அருளிச்செய்தார்மேல். ‘பத்து’க்கு அடைமொழியாக்கிப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘எம்பெருமானுடைய’ என்று தொடங்கி. நன்றி - நன்மையும் வெற்றியும்.

5. ‘வென்றி தரும்’ என்று பொதுவாக இருப்பதனால், எல்லாப் பலன்களையும்
  கொடுக்கும் என்கிறார், ‘செல்வத்தை’ என்று தொடங்கி.

      ‘இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்
  கொடுக்கும்’; ‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு
  அவற்றைக்கொடுக்கும்’; ‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு
  விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்’; ‘பிரபத்தியிலே
  இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் காலக்ஷேபத்துக்கும்
  போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.
  (முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)