பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

192

திருவாய்மொழி - ஏழாம் பத்து

கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன, ‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே தவிர்ந்தார் அத்தனைகாண்,’ என்று அருளிச்செய்தார். 1நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே. முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே  பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை. முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

    2
‘காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோட்டியிலே போகை அன்றோ அரிது? 3‘மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ, அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்? ‘பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தரவேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும், ‘பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத கோட்டியிலே அன்றோ போய்ப் புக்கது? ‘இராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக்கிடந்தே அன்றோ, ‘அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?

________________________________________________________________________

1. ‘அப்படி ஏவுவார் இலரோ?’ என்ன, ‘நாடுடை’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். அதனை விவரணம் செய்கிறார், ‘முடி சூடிய’ என்று தொடங்கி.

2. ‘காடு ஏறப் போகவுமாம்’ என்று தொடங்கும் வாக்கியம், சிறியாத்தானுடைய சங்கா
  வாக்கியம். ‘இராமவதாரத்தில்’ என்று தொடங்கி அருளிச்செய்யும் வாக்கியம்,
  சிறியாத்தானுடைய சங்கைக்குப் பட்டர் அருளிச்செய்த பரிஹாரம் வாக்கியம்.

3. ‘அப்படித் துரியோதனன் சபை கொடியதோ?’ எனின், அதன் கொடுமையை
  அருளிச்செய்கிறார், ‘மதுசூதனரே’ என்று தொடங்கி.

    ‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
    ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’

என்பது, பாரதம், உத்யோகபர். 95. இது, கிருஷ்ணனைப் பார்த்து விதுராழ்வான் கூறியது.
இச்சுலோகத்தின் பொருளை விளக்குகிறார் ‘பாண்டவர்கள்’ என்று தொடங்கி. இங்கே, வில்லிபாரதம், கிருட்டிணன் தூதுச்சுருக்கம், 142, 143-ஆம் செய்யுள்களைக் காணல் தகும்.

4. ‘அவனே’ என்று தொடங்குவது, பெரியதிருமொழி,  2. 2 : 3.