1ஆழ
ஐந்தாந்திருவாய்மொழி - முன்னுரை |
191 |
1ஆழ்வான்
ஒருகால், இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
2அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய
குணத்தில் ஒரு பகுதியே அன்றோ? அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின். 3‘பேரெயில்
சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும், ‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து, அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை
அநுசந்திக்கிறது? மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச்
சொல்ல வேண்டி வந்தால், 4‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
5‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று, அவர்
அருளிச்செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள் ‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும்
உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன, தூது சென்ற
_____________________________________________________________________
1. மேலே எல்லா அவதார விஷயமாகவும்
அருளிச்செய்தார்; ஸ்ரீராமாவதார விஷயமாக
மட்டும் இங்கு அருளிச்செய்கிறார், ‘ஆழ்வான்’ என்று தொடங்கி.
ஆழ்வான்
கூரத்தாழ்வார்.
2. ‘பல அவதாரங்களையும்
சொல்லாநிற்க. ஸ்ரீராமாவதார விஷயம் என்பது
யாங்ஙனம்?’ என்ன, ‘அதற்குக் காரணம்’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ
அல்லாத அவதாரங்கள்!’
என்கையாலே, அவை அபரதானங்களாய் இது
பிரதானமாயிருக்கையாலே, ஸ்ரீராமபிரானுடைய விஷயமாக நிர்வஹித்தார்
என்றபடி.
‘பெருமாள்’ என்றது, சக்கரவர்த்தி திருமகளை’ இது. வைணவப் பெருமக்கள்
வழங்கும் மரபு.
3. அத்துணைமாத்திரமே அன்று;
மேல் திருவாய்மொழியில் சொல்லப்பட்டதாகையாலும்,
இத்திருவாய்மொழியின் முதல் திருப்பாசுரம்
இராமாவதார விஷயமாகையாலும்
இத்திருவாய்மொழி இராமவதார விஷயம் என்கிறார், ‘பேரெயில்’ என்று
தொடங்கி.
4. ‘இங்ஙனம் கூறினால்
பக்ஷபாதம் வாராதோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘மற்றைய அவதாரங்களிலே’ என்று
தொடங்கி.
‘ஈடுபட்டவர்கள்’ என்றது, ஸ்ரீஆண்டாளை. பிராசங்கிகம்-இடைப்பிற வரல்.
‘மனத்துக்கு இனியானை’ என்றது, திருப்பாவை, 12. ‘சொல்லுவது’ என்றது,
‘சொல்லுவது ஆகையாலே பரமார்த்தம்’
என்றபடி.
5. ‘பெருமாளுடைய
குணத்திலே ஒரு பகுதியே அன்றோ அல்லாத அவதாரங்கள்?’
என்கைக்கு, கழுத்திலே ஓலை கட்டித் தூது
போன கிருஷ்ணன் நீர்மை
பெருமாளுக்கு இல்லையே?’ என்கிற சங்கையை ஆப்தர்களுடைய வினா
மூலமாக
அநுவதித்து, ஆபத சம்வர்தத்தாலே பரிஹரிக்கிறார் ‘பட்டர்’ என்று
தொடங்கி.
|