என
|
194 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
என்று
இருக்கிறார். 1‘அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லத் தக்கது; ஆகையால், மேற்கூறிய
ஞானத்திற்கு வேறானது அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ? பகவானை அடைவதற்கு
உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ? கற்பார் - 2ஒருவன்
ஒன்றைக் கற்பது ‘அப்போதைக்கு இனியது’ என்றாதல் ‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல்
ஆயிற்று; ‘இராமபிரான்’ என்கையாலே ‘அவை இரண்டும் இவ்விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.
‘யாங்ஙனம்?’ எனின், ‘இராமன்’ என்கிற இதனால், புறம்பு போகாமல் காற்கட்டும்படியான
அழகைச் சொல்லுகிறது; 3‘பிரான்’ என்கிற இதனால், அவ்வழகாலே சேதநரை
அநந்யார்ஹமாக்கும்படியும், நிலாத் தென்றல் சந்தனம்
___________________________________________________________________
1. ‘உடல் அன்று’ என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘அந்த ஞானந்தான்’ என்று
தொடங்கி.
‘ஸம்ஜ்ஞாயதே யேந
தத் அஸ்ததோஷம்
சுத்தம் பரம் நிர்மலம்
ஏகரூபம்
ஸம்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே
வா
தத்ஜ்ஞாநம் அஜ்ஞாநம்அத:
அந்யத் உக்தம்’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 :
84. இதனை, ‘தத் பிரஹ்ம யேகஜ்ஞாநேந
ஸம்ஜ்ஞாயதோ ஸம்த்ருஸ்யதே அதிகம்யதே ததேவ ஜ்ஞாநம்
அதோந்யத்
அஜ்ஞாநம் உக்தம்’ என்று சொற்களைக் கூட்டிப் பொருள் காண்க.
2. ‘‘கற்பார்’ என்னும்
சொல்,’ பிரியத்தையும் ஹிதத்தையும் நினைக்கின்றவர்கள்’ என்ற
பொருளைக் காட்டுமோ?’ என்ன,
‘பொருள் ஆற்றலால் காட்டும்,’ என்று அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘ஒருவன்’ என்று தொடங்கி.
3. ‘பிரான்’ என்பதற்கு,
ஸ்வாமித்துவம் உபகாரத்துவம் என்னும் இரண்டு பொருளும்
உண்டு ஆகையாலே, அவ்விருபொருள்களையும்
காட்டத் திருவுள்ளம் பற்றி,
அவ்வழகாலே சேதனர்களைத் தோற்பிக்கும்படியும், அவ்வழகை அடியார்களை
அனுபவிப்பிக்கும் உபகாரகத்துவமும் சொல்லுகிறது என்கிறார் ‘பிரான் என்கிற
இதனால்’ என்று தொடங்கி.
அநந்யார்ஹமாக்கல்-தனக்கே உரியவர் ஆக்குதல்.
‘பலவுறு நறுஞ்சாந்தம்
படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும்
மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள்
நுமக்கும்ஆங் கனையளே;
சீர்கெழு வெண்முத்தம்
அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்?
|