தண
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1 |
195 |
தண்ணீர் போலே, தன்னுடைய
ஆனந்திக்கச் செய்கிற தன்மையும் பிறர்க்கேயாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.
1ப்ரிய வாதீச - பெருமாள் ஒன்றை அருளிச்செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது
இல்லை; செவிப்படில் இனியதாய் அன்றி இராது. ‘யார்க்கு?’ என்றால், பூதா நாம் - சத்தையுடையனவான
எல்லாப் பொருள்களுக்கும்: அசத்துக்கு வேறுபட்ட தன்மை மாத்திரமே வேண்டுவது. ‘நன்று; அப்போது
பிரியமாய்ப் பயன் கொடுக்குமிடத்தில் வேறு ஒரு பலனைக் கொடுக்குமோ?’ என்னில், ஸத்ய வாதீச
- அருளிசெய்யுமதுதான் ஆத்மாக்களுக்கு ஹிதமாய் அன்றி இராது என்கிறது. 2ஒரு வார்த்தையே
இரண்டு ஆகாநின்றால் அல்லாதனவற்றிற்குச் சொல்ல வேண்டா அன்றோ?
__________________________________________________________________
தேருங்கால் நும்மகள்
நுமக்கும்ஆங் கனையனே;
ஏழ்புணர் இன்னிசை
முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும்
யாழ்க்கவைதான் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள்
நுமக்கும்ஆங் கனையளே.’
என்பது, கலித்தொகை, 8.
1. ‘பிரியம், ஹிதம்’ என்னும்
இரண்டு பெருமாளே என்பதற்குப் பிரமாணமும்,
பிரமாணத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார்,
‘ப்ரியவாதீச’ என்று தொடங்கி.
‘ப்ரியவாதீச பூதாநாம்
ஸத்யவாதீச ராகவ:
பஹூ ஸ்ருதாநாம்
வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாஹிதா;
என்பது, ஸ்ரீராமா. அயோத். 2. 32.
‘எதிர்வரு மவர்களை
எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின்
முகமலர் ஒளிரா,
‘எதுவினை இடரிலை
இளிதுநும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்?’
எனவே’
என்பது, கம்பராமாயணம்,
பால.
2. ‘மேற்கூறிய
சுலோகத்தில், ஸ்ரீராமபிரானுடைய வார்த்தைகள் அல்லவோ
பிரியத்தையும் ஹிதத்தையும் கொடுக்கும்
என்று சொல்லப்பட்டிருக்கின்றன!
ஸ்ரீராமபிரானுக்குச் சொல்லவில்லையே!’ எனின், ‘அது கிம்புனர்
நியாய சித்தம்’
என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘ஒரு வார்த்தையே’ என்று தொடங்கி.
‘அல்லாதனவற்றிற்கு’ என்றது, ‘சொரூபம் உருவம் குணம் முதலானவற்றிற்கு’
என்றபடி.
|