1
|
196 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
1‘ராமோ
ராமோ ராம இதி’ என்னும்படியன்றோ நாட்டை அகப்படுத்தியிட்டு வைக்கும்படி? 2அவன்
ஸத்தை இவனுடைய ஸத்தைக்குக் காரணம்; பின்பு உண்டானவை இவனுடைய போகத்துக்குக் கண்டவை.
3ஆக, ‘பிரியமும் ஹிதமும் ஆகிய இரண்டையும் வேண்டியிருப்பார் அவனை ஒழியக் கற்பரோ?’
என்றபடி. 4‘நேரான ஐஸ்வரியத்தோடுகூட நேரான தர்மமும் ஸ்ரீராமபிரானிடத்தினின்றும்
உண்டாயிற்று’ என்பது ஸ்ரீராமாயணம். என்றது, 5‘நேரே சாதனம் சாத்தியம் ஆகிய இரண்டும்
இந்த இராமனே என்கிறது அன்றோ?’ என்றபடி. கற்பார் இராம பிரானை - 6கற்பார்
என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்; ‘மற்றையவற்றைக் கற்கலா
______________________________________________________________________
1. ‘அவ்வழகாலே சேதநரை
அநந்யார்ஹமாக்கும்படியும்’ என்று மேலே
அருளிச்செய்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘ராமோ’
என்று தொடங்கி.
‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா;
ராமபூதம் ஜகத்அபூத்
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’
என்பது, ஸ்ரீராமா. யுத். 131 :
97
2. ‘ராமோ ராமோ’ என்ற
பிரியமாந்தன்மை ஒழிய, ஹிதமாந்தன்மை மேற்சுலோகத்தில்
சொல்லப்படவில்லையே?’ என்ன,
‘அவன் ஸத்தை’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். என்றது, ‘ஹிதமாந் தன்மைக்கு
அவன் சத்தையே
போரும்; பிரியமாந்தன்மையே சொல்லவேண்டுவது’ என்றபடி. சத்தை-இருப்பு.
‘பின்பு உண்டானவை’ என்றது, குணம் விக்கிரகம் சௌந்தரியம் முதலானவைகளை.
3. கூறிய பொருள்களை
முடிக்கிறார், ‘ஆக, பிரியமும்’ என்று தொடங்கி.
4. ‘பிரியம், ஹிதம் என்னும்
இரண்டும் இவ்விராமபிரானே’ என்றதற்குப் பலித்த
பொருள், உபாய உபேயங்கள் இரண்டுத் அவ்விராமபிரானேயாவர்
என்று கூறத்
திருவுள்ளம் பற்றி, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘நேரான’ என்று தொடங்கி.
‘ராம: ஸத்புருஷோ
லோகே ஸத்ய தர்ம பராயண:
ஸாக்ஷாத் ராமாத் விநிர்வ்ருத்த:
தர்மஸ்சாபி ஸ்ரியாஸஹ’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 :
29. இச்சுலோகத்தின் பின் அடியில் ‘ஸாக்ஷாத்
ஸ்ரியாஸ: ஸாக்ஷாத் தர்ம: ராமாத் விநிர்வ்ருத்த;’
என்று சொற்களைக் கூட்டிப் பொருள்
காணல் வேண்டும். ஸ்ரீ என்றது, சத்தியத்தை; தர்மம் என்றது,
சாதனத்தை. ‘இவை
இரண்டும் இவரிடத்தில் உண்டாயின’ என்றது, இவர்தாமேயாயிருப்பர் என்றபடி.
5. ஆக, சாக்ஷாத் ஸ்ரீயோடேகூட,
சாக்ஷாத் தர்மமானது இராமபிரானாலே உண்டாயிற்று
என்பது பொருளாகையாலே, இதனை அருளிச்செய்கிறார்,
‘நேரே’ என்று தொடங்கி.
6.
‘’கற்பார் இராமபிரானைக் கற்க வேண்டாவோ?’ என்னாமல், ‘மற்றங்கற்பரோ’
என்கிறது என்?’
என்ன, ‘கற்பார்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
|