க
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1 |
197 |
காது,’ என்று விலக்குதலேயாம்,
1ஆசையாலே செய்யப்படுவதாகில் தானாகவே செல்லும் அன்றோ’ ஆகையால், வேறு ஒன்றில்
போகாமையே வேண்டுவது. 2‘மற்றும்’ என்றதனால், வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை
வேறுபடுத்துகிறார் அல்லர். வணங்கக்கூடிய பொருளிலே கூறு இடுகிறார். 3வேறு தெய்வங்களாகிற
பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்? ஆதலால், பரத்துவத்தையும் மற்றை அவதாரங்களையும்
கழிக்கிறார்.
4‘என்
எண்ணமானது வேறிடத்தில் போகிறது இல்லை’, என்றாற்போலே, ‘மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:- 5எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்றுகாணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான். 6‘என்றன் அளவு அன்றால்
யானுடைய அன்பு’ என்றும், ‘உயிரின்
___________________________________________________________________
1. ‘ஏனையவற்றை விலக்குதல்
மாத்திரம் போதியதாமே? படியுங்கோள் என்ன
வேண்டாவோ?’ என்ன, ‘ஆகையாலே’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
2. ‘மற்றும்’ என்பதற்கு,
‘வேறு தெய்வங்களை’ என்று பொருள் அருளிச்செய்தார்
மேல். இனி. ‘மற்றும்’ என்ற சொல்,
இறைவனுடைய ஐவகை நிலைகளுள்,
பரத்துவம் முதலான ஏனை நிலைகளையும், இராமாவதாரம் ஒழிந்த மற்றை
அவதாரங்களையும் குறிப்பதாகத் திருவுள்ளம் பற்றி வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார், ‘மற்றும்
என்றதனால்’ என்று தொடங்கி.
3. ‘ஏன்? ‘மற்றும்’ என்ற
சொல்லால் மற்றைத் தேவர்களையே கூறுகிறார் என்று
கொண்டாலோ?’ எனின். அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘வேறு
தெய்வங்களாகிற’ என்று தொடங்கி.
4. அதற்குத் திருஷ்டாந்தமும்
திருஷ்டாந்த சுலோகத்திற்குப் பொருளும்
அருளிச்செய்கிறார், ‘என் எண்ணமானது’ என்று தொடங்கி.
‘ஸ்நேஹோ மே பரமோ
ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா
வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’
என்பது, ஸ்ரீராமா. உத். 40 :
16. இது திருவடி கூற்று.
5. மேற்படி சுலோகத்துக்கு
அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘எழுந்தருளுகிற போது’
என்று தொடங்கி. எழுந்தருளுகிற போது -
பரமபத்ததுக்கு எழுந்தருளும் போது.
‘அவ்வளவு அன்றுகாணும்’ என்றது. ‘இங்கே இருந்தே உம்முடைய சரித்திரத்தை
அனுபவம் செய்யுமது ஒழிய. கூட வரும்படி அன்றுகாணும்’ என்றபடி.
‘பரம;’ என்றதற்கு,
‘தன்னைக்காட்டிலும் மேலானது’ என்று பொருள் கொண்டு
அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘என்றன்’
என்று தொடங்கியும், ‘உயிரின்’ என்று
தொடங்கியும். இவை முறையே, இரண்டாந்திருவந். 100,
திருவாய். 9. 6 : 1.
|