பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பரமன

198

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’ என்றும் சொல்லுமாறு போலே ராஜந் த்வயி-இதுதானும் என்னால் வந்தது அன்று. ‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே. நித்யம் ப்ரிதிஷ்டித; - 1‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது, தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே . பக்திஸ்சநியதா - 2பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்; பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ - கொள்க’ என்னும்படியாய், முறை அறிந்து பற்றின இளையபெருமாள் நிலை. வீர - 3உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது. தானும் அவன் ஆகையாலே தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான், பாவோ ந அந்யத்ர கச்சதி - 4என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது, ‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ என்னுமாறு போலே. 5‘சர்வ சத்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.

_______________________________________________________________________

1. ‘நித்யம்’ என்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இப்போது’ என்று தொடங்கி. ‘மற்று
  ஒரு போது கொள்ளுகிறோம்,’ என்றது, ‘அன்பு இல்லாத காலத்திலே
  கூட்டிக்கொண்டு  போகிறோம்’, என்றபடி. ‘தர்மியைப் பற்றிக் கிடப்பது’ என்றது,
  ‘திருவடியுடைய சொரூபத்தைப் பற்றிக் கிடப்பது ஆகையாலே’ என்றபடி.
  அன்றிக்கே, ‘ராஜந் த்வயி’ என்ற விலக்ஷண குணத்தோடு கூடிய பெருமாளுடைய
  சொரூபத்தைப் பற்றிக் கிடப்பதாகையாலே என்னுதல்.

2. பத்திக்கும் சினேகத்துக்கும் வேறுபாடு: பத்தியாவது, அடியவனுக்கு ஸ்வாமியிடத்தில்
  பிறப்பது ஓர் அநுபாக விசேடம். சினேகமாவது, ஒருவரிடத்திலுள்ள குணம்
  காரணமாக வரும் பிரீதி. இந்த வேறுபாட்டினைக் காட்டுகிறார், ‘பெருமானை’
  என்று தொடங்கி.

3. ‘வீர’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘உம்முடைய’ என்று தொடங்கி. வேறும்
  பாவம் அருளிச்செய்கிறார், ‘தானும்’ என்று தொடங்கி. ‘அவனாகையாலே’ என்றது,
  ‘வீரன் ஆகையாலே’ என்றபடி.

4. ‘பாவ: அந்யத்ர ந கச்சதி’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘என்னை’ என்று
  தொடங்கி.. அதற்கு பிரமாணம் காட்டுகிறார், ‘என்னுடைய’ என்று தொடங்கி. இது,
  திருவாய். 1. 7 : 8.

5. ‘தானுங் கில்லான்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சர்வசக்தி’ என்று தொடங்கி.