1
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1 |
199 |
1‘கண்ட
கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது. ‘அந்யத்ர’
என்கிறது, போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி; 2‘மற்று ஆரானும் உண்டு
என்பார்’ என்னமாறு போலே, இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார். கற்பரோ -
3சேதநர் அல்லரோ? உலகம் அடங்கலும் தம்முடையபடி என்று இருக்கிறார்;
‘இவ்வூரிற்பிள்ளைகள் கண்ட சர்க்கரை ஒழிய உண்ணும்படி எங்ஙனே?’ என்பாரைப் போலே. மற்றையவற்றை
விட்டு இராமபிரானைக் கற்கைக்குக் காரணம் சொல்லுகிறார் மேல்: புல் பா முதலா - பா என்பது,
பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல். ‘பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்;
என்றது, பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி. இதனால், ‘புல் முதலாகத்
தாவரம் முடிவாக’ என்றபடி.
புல் எறும்பு - ஆதி
பிறிவிகளிற் கடையான எறும்பு தொடக்கமாக. 4பிரமனை எண்ணினால் பின்பு முடிவில் நிற்கக்கடவது
அன்றோ எறும்பு? 5‘புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று
___________________________________________________________________
1. ‘அந்யத்ர’ என்றதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘கண்ட கண்கள்’ என்று தொடங்கி.
இது, அமலனாதிபிரான்,
10.
2. பரமபதத்திலே என்னாமல்
‘அந்யத்ர’ என்றதற்கு வேறும் ஒரு திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘மற்ற ஆரானும்’ என்று தொடங்கி.
இது, சிறியத்திருமடல், 4, 5.
3. ‘கற்பரோ’ என்ற ஓகாரத்துக்குத்
திருஷ்டாந்தத்தோடு வேறும் ஒரு பாவம்
அருளிச்செய்கிறார். ‘சேதநர் அல்லரோ?’ என்று தொடங்கி.
‘இவ்வூரிற்பிள்ளைகள் கண்ட
சர்க்கரை ஒழிய உண்ணும்படி எங்ஙனே?’ என்ற
இடத்தில், ஓர் அரசகுமாரன் பசியால் இளைத்து ஓர்
அம்மையார் வீட்டிற்குச்
சென்று உணவு வேண்ட, அவளும், ‘உண்’ என்று சோறு இட, ‘அதற்கு வியஞ்சனம்
வேண்டும்’ என்ன, அவள் ஒரு மா வடுவைக்கொண்டு வந்து வைக்க, அவன்
‘கண்ட சர்க்கரை இல்லையோ?’
என்ன, அவளும் ‘இல்லை’ என்ன,
‘இவ்வூரிற்பிள்ளைகள் கண்ட சர்க்கரை இல்லாமல் எப்படி உண்பார்கள்?’
என்று
தன்னைப் போலே விசாரித்துச் சொன்னானை என்ற கதையைக் கூறுவார்கள்.
4. ‘சஞ்சரிக்கின்ற
பொருள்களில் எறும்பு புல்லியதோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘பிரமனை’ என்று தொடங்கி.
5. ‘அற்பமான
புல்லையும் எறும்பையும் பிரதானமாகச் சொல்லுவான் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘புற்பா முதலா’ என்று தொடங்கி.
|