1
2 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
1‘அமர்ந்து
புகுந்தேன்’ என்று தம்மால் ஆன அளவும் புகுர நின்றார். பின்பு 2அவனைப் புகுர நிற்கக்
கண்டிலர். ‘இனிக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று விழுந்துகிடந்து கூப்பிடுகிறார்.
3விளம்பத்திற்குக் காரணம் இல்லாத சாதனத்தைப் பற்றி நின்றவன், அது பலத்தைக்
கொடுக்குந்தனையும் கிடந்து கூப்பிடுவானத்தனை அன்றோ? 4இவர்தாம் மேலே செய்ததாயிற்றது,
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய ஆகிஞ்சந்யத்தை
விண்ணப்பஞ்செய்து கொண்டு சரணம் புக்காராயன்றோ இருக்கிறது? 5அது, ‘என்னையே
எவர்கள் சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையினைத்
___________________________________________________________________
1. மேல் திருவாய்மொழியோடு
இத்திருவாய்மொழிக்குச் சுருக்கமாகச் சங்கதி
அருளிச்செய்கிறார், ‘அமர்ந்து புகுந்தேன்’ என்று
தொடங்கி. தம்மாலானவளவும் புகுர
நிற்கையாவது, ‘அகலகில்லேன் இறையும்’ என்று உறையும் அலர்மேல்மங்கையைப்
புருஷகாரமாகக் கொண்டு, புகல் ஒன்றில்லா அடியராகிய இவர் அவன் அடிக்கீழ்
அமர்ந்து புகுந்து பற்றுமிடத்தில்
உபாய புத்தியையும் தவிர்த்து நிற்றல்.
2. ‘அவனைப் புகுர நிற்கக்
கண்டிலர்’ என்றது, ‘விரோதியைப் போக்கிப் பேற்றினைக்
கொடுத்தலைக் கண்டிலர்’ என்றபடி.
3. ‘ஒரு சாதனத்தை அநுஷ்டித்தவன்
பலத்தை அடையுமளவும் ஆறியிருக்குமாறு போலே,
செய்த சரணாகதி பலிக்குமளவும் ஆறியிராமல் கூப்பிடுகிறது
என்?’ என்ன,
‘விளம்பத்திற்கு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். விளம்பம்
-
கால நீட்டிப்பு.
4. மேலே சுருங்க அருளிச்செய்ததனை
விரித்து அருளிச்செய்கிறார், ‘இவர்தாம்’ என்று
தொடங்கி. மேலே அருளிச்செய்த ‘ஆனவளவும்’
என்றதனை விவரணம் செய்கிறார்,
‘திருவேங்கடமுடையான’ என்று தொடங்கி,. ஆகிஞ்சந்யமாவது, கர்மம்
ஞானம்
பத்திகளிலும், அவற்றுக்குக் காரணங்களான சமம் தமம் முதலான ஆத்துமகுணங்களிலும்
அந்வயம்
இன்றிக்கே, அவற்றுக்கு விபரீதங்களானவற்றாலே தான் பரிபூர்ணனாயிருக்கிற
இருப்பையும், தன்னுடைய
சொரூபம் எல்லா வகையாலும் ஈஸ்வரனுக்கே
பரதந்திரமாயிருக்கிற இருப்பையும் நினைத்து, ‘நம்
காரியத்துக்கு நாம் கடவோம்
அல்லோம்’ என்றிருத்தல்.
5. மேலே, ‘பின்பு அவனைப்
புகுர நிற்கக் கண்டிலர்’ என்றதனை விவரணம் செய்கிறார்,
‘அது, என்னையே’ என்று தொடங்கி.
‘மாமேவ யே ப்ரபத்யந்தே
மாயாமேதாம் தரந்தி தே.’
என்பது, ஸ்ரீ கீதை, 7 :
14.
|