பட
|
208 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பட்டாய்’ என்னுமாறு
போலே. ‘பிறந்தவர் பிறவிநின் பலத்தை இழப்பரோ?’ என்றபடி. 1வகுத்த துறையிலே
பாரதந்திரியமாகையாலே வாசி அறிந்த இவர்களுக்கு உத்தேசியமாகத் தோற்றுமன்றோ? 2வகுத்தது
அல்லாத துறைகளில் பண்ணின வாசனையாலே ‘இது புருஷார்த்தமோ?’ என்று தோற்றுகிறது.
நாட்டிற்பிறந்து -
3சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவனாயிருக்கிறவன், கர்மங்கட்குக் கட்டுப்பட்டுவர்களுங்கூட
அருவருக்கும் தேசத்திலே பிறந்து. 4‘செருக்கனான இராவணனுடைய வதத்தைப் பிரார்த்திக்கிற
தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியருமான விஷ்ணு மனித உலகத்திலே அவதரித்தார்;
இது பிரசித்தம்’ என்கிறபடியே. 5ஸ:-ஜஞே ஹி - ‘கர்மங் காரணமான பிறவி
இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய்
வந்து பிறந்தான்’ என்றபடி. ‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,
____________________________________________________________________
1. ‘ஸர்வம் பரவசம் துக்கம்’
என்றபடியே, பாரதந்திரியம் துக்க ரூபமாய் இருக்க
இதனைக் கல்விக்குப் பலமாகச் சொல்லலாமோ?’
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘வகுத்த துறையிலே’ என்று தொடங்கி. இவர்களுக்கு
ஆழ்வார்களுக்கு.
2. ‘நமக்கு அப்படித் தோன்றவில்லையே?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘வகுத்ததல்லாத’ என்று தொடங்கி.
3. இங்கே வந்து பிறந்தது குணமாகைக்கு
உறுப்பாக, அவனுடைய மேன்மையையும்
சம்சாரத்தினுடைய தன்மையையும் அருளிச்செய்கிறார், ‘சம்சார
சம்பந்தம்’ என்று
தொடங்கி.
4. அப்படிப் பிறந்ததற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘செருக்கனான’ என்று தொடங்கி.
‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய
ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே
லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’
என்பது, ஸ்ரீராமா அயோத். 1 :
7. இங்கு, கம்பராமாயணம், திருவவதாரப்படலம்,
5 முதல் 25 முடியவுள்ள செய்யுள்களையும், யுத்த
காண்டம், நிகும் படலம், 138
முதல் 142 முடியவுள்ள செய்யுள்களையும் படித்து அறிதல் தகும்.
5. மேலே
காட்டிய சுலோகத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘ஸ:’ என்று
தொடங்கி. ஸ:-பிரசித்து
பரமான தச்சப்தத்துக்குச் சொல்லப்படுகிற பொருளிலே
நோக்கு என்கைக்காக, ‘ஸஹி-ஜஜ்ஞே’ என்று
கூட்டி. இரண்டற்கும் பொருள்
அருளிச்செய்கிறார், ‘கர்மங்காரணமான’ என்று தொடங்கி.
|