பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 2

209

‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. 1இரப்புதான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? 2‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ? தேவை:- 3தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக்காட்டினவாறே எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர், ‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’ என்பார்கள். என்றது, ‘இலங்கையை சுட்டுத் தரவேணும்,’ என்பர்கள் என்றபடி. உதீர்ணஸ்ய ராவணஸ்ய - 4அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வரபலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு. வத அர்த்திபி:- 5தாங்கள் பட்டி நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள். 6‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச்

_____________________________________________________________________

1. ‘ஆத்ம மாயயா, ஸம்பவாமி- ‘என் இச்சையாலே பிறக்கிறேன்’ என்னாநிற்க,
  ‘அவர்கள் இரந்த காரணத்தாலே பிறந்தான் என்கிறது என்?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இரப்புதான்’ என்று தொடங்கி.

2. இச்சையாலே அவதரித்தான் என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இச்சையாலே’
  என்று தொடங்கி.

    ‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
    ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’

என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.

3. ‘அங்ஙனம் இரந்தவர்கள் தாம் ஒரு திருவடி, திருவனந்தாழ்வான் அல்லர்;
  செருக்குற்றவரகளாய்ச் சுயகாரியபரர்களாய் இருப்பவர்கள்’ என்கிறார், ‘தங்கள்’
  என்று தொடங்கி. சுயகாரிய பரர் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார். ‘நீணகர்’
  என்று தொடங்கி. இது, திருவிருத். 92.

4. ‘ராவண’ என்ற சொல்லிற்குப் பொருள் ‘அச்சத்தையுண்டாக்குகின்றவனான
  பையல்’ என்பது, ‘பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகன் பொருப்பின் கீழ்க்
  கிடந்து போகாது, இரக்கம் உறக் கதறுதலால் இராவணன்தான் எனப்பெயரும்
  இயம்பி’ என்பது, கம்ப. உத்தரகாண், வரையெடுத்த படலம்.

5. ‘‘ஸீஹ்ருதம் ஸர்வ பூதாநாம்’ என்று இருக்குமவனை இதற்காக யாசிக்கலாமோ?’
  என்ன, ‘தாங்கள்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. ‘ஆயின், இறைவன் தன் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத காரியத்தைச் செய்வான்
  என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘ஒருவனை’ என்று தொடங்கி.

    ‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
     களைகட் டதனோடு நேர்.’

என்பது, திருக்குறள்.