New Page 1
|
210 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
செய்தானைத்தனை. அர்த்தித:-
1தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற்பட்டக் கிடந்து இதுவே.
அர்த்தித:- 2உபாசித்தவர் அல்லர்.
மாநுஷே லோகே
விஷ்ணு: ஸநாதந;- 3‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி
பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்;
அவர்கள் மனிதத் தானத்திலேயாம்படியான பொருள்கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார்.
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ? ஜஜ்ஞே- 4தோன்றிய
மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள்
அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது
ஸ்ரீராமாயணம். 5‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
நாட்டிற்பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா - கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக்
கட்டப்பட்டவர்களோடே ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து, அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே,
கடலுக்கு அக்கரையிலே உயிரும் இக்கரையிலே உடலுமாம்படியான ஜானகியின்
____________________________________________________________________
1. ‘அர்த்தித:’ என்ற
இறந்த காலத்துக்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘தன்னுடையச்
சோதிக்கு’ என்று தொடங்கி. என்றது,
‘பிற்பட்டோம் என்று புண்பட்டான்’ என்றபடி.
தன்னுடைச் சோதி - பரமபதம்.
2. ‘அர்த்தித:’ என்றதற்கு,
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘உபாசித்தவர்
அல்லர்’ என்று.
3. ‘விஷ்ணு:’ என்று அவன்
பெருமையையும், பிறந்த இடத்தின் கொடுமையையும்
அருளிச்செய்கிறார், ‘உண்டுபண்ணப்பட்ட’ என்று
தொடங்கி. ‘அவர்கள் மனிதத்
தானத்திலேயாம்படியான பொருள்’ என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘மனிசர்க்கு’ என்று தொடங்கி. இது, திருவாய். 8. 1 : 5.
4. ‘ஜஜ்ஞே’ என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘தோன்றிய மாத்திரமன்று’ என்று
தொடங்கி.
‘ததஸ்ச த்வாதஸே
மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’
என்பது, ஸ்ரீராமா. பால. 18 :
10.
5. இங்குப்
பிறந்தவனுக்கு வேறு ஒரு பிராமாணம் காட்டுகிறார், ‘நான்’ என்று
தொடங்கி. ‘ஜாதோஹம் யத்தவோதராத்’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.
|