ப
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
2 |
211 |
பிரிவு என்ன, பெரியவுடையார்
சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு, அதற்கு மேலே, செய்ந்நன்றி அறியாத மனிதர்கட்காக.
நாட்டை நலியும்
அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச்செய்து -யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை
நலிகிற இராவணன் முதலான கண்டகரை, 1‘பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய
மெல்லடிகள் குருதி சோர விரும்பாதகான் விரும்பி, 2‘எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ!’
என்கிறபடியே. அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று, இலங்கையின் வாசலிலே வீரலக்ஷ்மியோடு
கூடினவராய்க்கொண்டு எழுந்தருளி நிற்க, அவ்வளவிலே பிரமன் முதலான தேவர்கள் வந்து. 3‘தருமத்தைத்
தாங்குகிறவர்களுக்குள் சிறந்தவரே! எங்களுடைய இந்தக் காரியம் தேவரீரால் செய்யப்பட்டது; இராமரே!
இராவணன் கொல்லப்பட்டான்; மகிழ்ச்சியுடையவராய் வைகுண்டத்திற்குச் செல்லும்’ என்கிறபடியே,
‘நாங்கள் வேண்டியவை அடைய எங்கள் அளவு பாராதே தேவர் செய்தருளிற்று, இனி, தன்னுடைச்சோதி
ஏற எழுந்தருள அமையும்’ என்ன, அவ்வளவிலே சிவன், ‘நாடு அடையத் தேவரீருடைய பிரிவினாலே அழிந்ததைப்
போன்று கிடக்கின்றது; திருத்தாய்மாரையும் திருத்தம்பிமாரையும் திருப்படை வீட்டிலுள்ள சனங்களையும்,
மீண்டு புக்குச் சில நாள் எழுந்தருளியிருந்து ஈரக்கையாலே தடவிப் பாதுகாத்து எழுந்தருள வேணும்,’
என்ன, 4‘கடல்ஞாலத்து அளிமிக்கான்’ என்னும்படியே, பதினோராயிரம் ஆண்டு எழுந்தருளியிருந்து
பாதுகாத்தப்படியைச் சொல்லு
______________________________________________________________________
1. பெருமாள் திருமொழி, 9
: 5.
2. பெருமாள் திருமொழி, 9
: 2.
3. ‘ததிதம் ந: க்ருதம்
கார்யம் த்வயா தர்மப்ருதாம்வர
நிஹதோ ராவணோ
ராம ப்ரஹ்ருஷ்சடா திவமாக்ரம’
என்பது, ஸ்ரீராமா. யுத். 120 :
29.
இங்கே, கம்பராமாயணம், யுத்தகாண்டம்,
மீட்சிப்படலம், 98 முதல் 115 முடியவுள்ள
செய்யுள்களைக் காண்க.
4. திருவாய்..
4. 8 : 5.
|